Wednesday, March 23, 2011

ருத்ராக்ஷங்கள்


வ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்!  ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1)அஸ்வினி கேது நவ முகம்
(
Alpha, Beta - Aries)
2)பரணி சுக்ரன் ஷண் முகம்
(
No 28,29,41 Taurus)
3)கார்த்திகை சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்
(
Pleiades)
4)ரோஹிணி சந்திரன் த்வி முகம்
(
Aldebaran Hyades,
Alpha, Theta, Gama,
Delta and Epsilon
Taurus
)
5)மிருகசீரிஷம் செவ்வாய் த்ரி முகம்
(
Lambda, Phi 1, Phi 2, Orion)
6)திருவாதிரை ராகு அஷ்ட முகம்
(
Betelgeaux - Alpha Orion)
7)புனர் பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
(
Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively)
8)பூசம் சனி சப்த முகம்
(
Gama, Delta and  Theta of Cancer)
9) ஆயில்யம் புதன் சதுர் முகம்
(
Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra)
10) மகம் கேது நவ முகம்
(
Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis)
11)பூரம் சுக்ரன் ஷண் முகம்
(
Delta and Theta Leo)
12)உத்தரம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
(
 Beta and 93 Leo)
13)ஹஸ்தம் சந்திரன் த்வி முகம்
(
Delta, Gama, Eta, Virgo)
14)சித்திரை செவ்வாய் த்ரி முகம்
(
Spica, Alpha Virgo)
15)ஸ்வாதி ராகு அஷ்ட முகம்(Arcturus - Alpha Bootes)
16)விசாகம் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
Alpha, Beta etc Libra)
17)அனுஷம் சனி சப்த முகம்
(
Beta, Delta, Pi -Scorpia)
18)கேட்டை புதன் சதுர் முகம்
Antares Alpha, Sigma Tau Scorpio)
19)மூலம் கேது நவ முகம்
(
Scorpio, tail stars)
20)பூராடம் சுக்ரன் ஷண் முகம்
(
Delta and Epsilon Sagittarius)
21)உத்திராடம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
(
Zeta and Omicron Sagittarius)
22)திருவோணம் சந்திரன் த்வி முகம்
(
Altair - Alpha Aquila)
23)அவிட்டம் செவ்வாய் த்ரி முகம்
(
Delphinus)
25)சதயம் ராகு அஷ்ட முகம்
(
Lambda Aquarius)
25)பூரட்டாதி சனி பஞ்ச முகம்
(
Alpha and Beta Pegasus)
26)உத்திரட்டாதி சனி சப்த முகம்
(
Gama Pagasus and Alpha Andromeda)
27)ரேவதி புதன் சதுர்முகம்
(
Zeta Piscum)
இந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா, இருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள்.
அனைவரும் தமக்குரிய ருத்ராக்ஷங்களை அணிந்து நலம் பெறலாமே!
**********

ருத்ராக்ஷம்


ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்


உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது.இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இருபரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்குமூலமாக அமைந்துள்ளதுவேதாந்தம் இதையே புருஷத்துவம்மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறதுஇருவகையன செயல்அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்குதெரியாதுவேதாந்த உண்மையான இந்த இரு செயல்களைபுரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளைபுரிந்துகொள்ளமுடியும்

இயற்கையின் தன்மை சாஸ்வதமானதுஇயற்கை என்பதுஉருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது,இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும்.ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும்இதுதற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம்புருஷத்துவமே ஆகும்.



அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம்கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனகூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள்வடிவம் மற்றும் தன்மைஇயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதைஅறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் எனகூறலாம்ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால்இயங்கிவருகிறது என கூறுவார்கள்முக்குணத்தை(தோஷங்கள்வாதபித்தகப குணம் சொல்லுவதைகேள்விப்பட்டுள்ளோம்இந்த 
இயற்கையன மூன்று குணங்கள்மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாகஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறதுமனித உடலில் தோஷத்தில்ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது)என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள்ப்ரகிருதித்துவம் (செயற்கையானதுஎன்றும்வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்தசாரமான புருஷப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கானசான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறுசெயல்படுகிறது என பார்ப்போம்மனித உடல் என்பது இயற்கையின் படைப்புஇதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும்பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம்கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறதுநமதுஇயற்கையான (புருஷார்த்தகுணம் என ஒன்று உண்டுஆனால்சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள்ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும்நான்கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானதுப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது.புருஷத்துவமும்பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமேவாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையானபுருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள்புருஷத்துவமேஅனைத்து 
விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்துமதத்தின் விளக்கம்அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள்எனும் கொள்கையை கொண்டுள்ளதுபாரதத்தில் தோன்றியமதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையானஇறை நிலை என ப்ரகடனப்படுத்தியதுபுருஷ நிலையை சிவன்என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள்.சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம்சிவநிலை என்பது அசைவற்றதுசக்திநிலை என்பதுஅசையக்கூடியது.(இயங்கும் தன்மைஎன்ற வேறுபாட்டால்தான்

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்
எனவகைப்படுத்தினார்கள்இயற்கையில் செயற்கை தன்மையும்,செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன்கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும்இத்தத்துவத்தின்அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள்அமைந்துள்ளனபருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம்,இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பதுசெயற்கையான செயல்பாடு

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும்ஆடையும்ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பதுசிவசக்தி நிலையை குறிக்கும்இதனால்தான் சக்தி வழிபாடுசெய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும்,இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன்நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும்பொருட்களை கவனித்தால் சங்குஜடாமுடிமண்டை ஓடு,ருத்ராஷம்,மிருக தோல் 
அனைத்தும் இயற்கையாக கிடைத்தபொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாதுசிலபொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.
ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்துதுவங்குகிறதுபுருஷ தன்மை என்பது இயக்கமற்றதுபுருஷத்தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லைபிரகிருதிக்கு காலபரிமணமும் உண்டுபிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச,கால வித்யாசம் இன்றி இருக்கிறதுவளர்ந்த மனிதன் புருஷநிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள்கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும்புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம்தியானம் மற்றும்யோகம் எனும் ஆன்மீக வழிகள் 
உருவாக்கப்பட்டுள்ளன.செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலைஎனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையனபொருட்கள் உதவுகிறதுஇயற்கை பொருட்கள் மூலம் மனிதன்தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும்பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும்ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாகஅனைவரும் நம்புகிறார்கள்ஆனால் சனாதான தர்மம் எனஅழைக்கப்படும் பாரத 
தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும்ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டுகுறிப்பாகருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டுபிறஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறையமுரண்பாடான தகவல்கள் உலவுகிறதுதெரியவேண்டியவிஷயம் மறைக்கப்பட்டும்தேவையற்ற விஷயங்கள்உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டுசெய்கிறதுஇந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றிவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயேஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை)கனி வடிவம் பெருவதில்லைஅத்தி பூக்காது விதை அளிப்பதுபோல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும்மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில்இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாகதிகழ்கிறது
இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம்கிடைப்பதில்லைமேலும் ருத்ராஷத்தை பயிர் செய்துவிளைவிக்க முடியாதுருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில்வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோருத்ராஷத்தின்வடிவத்தையோ பெறுவதில்லைநேபாள தேசத்தில்பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூடஅதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள்.நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம்அதில் உள்ள துளை அனைத்தும்இயற்கையானதுபார்க்கும்பொழுது எந்த வித செயல்படும்இல்லாத பொருளாக 
தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள்புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்றுசாதாரணஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் எனஎதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால்இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip) 
வேலைசெய்வதையும்உலகின் பல கிலோ மீட்டர் தூரம்இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ளசெய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டுஉயிரற்றமணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ளதாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்யமுடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அதுவேலை செய்யாதுஅதற்கு தேவையான இணைப்புகள்,
மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள்அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள்அதுபோல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஆன்மீக ஆற்றல்கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால்அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகிஉங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.