Thursday, November 18, 2010

கவிதை சொல்ல வருகிறேன்

 கவிதை சொல்ல வருகிறேன்
சமாதிகளில் நாங்கள்
சாவகாசமாக
ஓய்வெடுகிறோம்தான்!

ஆனாலும்
எங்களின் ஆயுளில்
நிறைவேறாத
அல்ப ஆசைகள்
எங்களுக்குள்
எகத்தாளமிட்டுக்
கொண்டுதானிருக்கின்றன!

என்ன செய்வது?
செத்த பின்னும்
சிவனே என்று
நிம்மதியாய்
இருக்க முடிவதில்லை
எங்களால்!

ஆசைகளை
அறவே ஒழிக்க
அனுபவித்துத் தீர்
என்பதுதான்
எங்களுக்குத்
தெரிந்த ஒரே வழி!

அதனால்தான்
அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறோம்!
எங்கள் பதிவுகளின்
வாயிலாக!