Sunday, March 27, 2011

கறிவேப்பிலை


 
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது.
75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது.
170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறதுஅதில் ஒன்றுகறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது. ]
உணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.
"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.
திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170 கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10காய்கறிகளையும் குறிப்பிடுகிறதுஅதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த
இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம்ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது.
அதாவதுநரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம்உண‌விலு‌ம்த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.

உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?
கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் வாசனைக்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது பல பேருக்குத் தெரியாது.
அதன் மருத்துவ குணங்களை புரிந்து கொண்டதால் தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடுகையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.
பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.
கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.
எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.
கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.
தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.
உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

Saturday, March 26, 2011

தேன்


தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை(கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும்.
உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.


இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன்கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) [1]கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் [2]

[தொகு] தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. 

  சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. 

  கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. 

  மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 

  சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். 

  தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும். 

  எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. 

  தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். 

 அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும். 

இரத்த சோகையை அகற்ற: 

  நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. 

  தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன். 

  தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும். 

  தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. 

  சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம். 

  தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு. 

  தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது. 

  தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள். 

  டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். 

  கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது. 

  முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள். 

தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 

  சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.  


தேன் கூட்டின் அமைப்பு
தேன் கூடும்  திருமறையின் கூற்றும் ...


அறுகோண அறைகள் கொண்ட கூடு

தேன்கூடு(1மீ),
Apis dorsata
தேன்கூட்டில் தேனிக்களின் அமர்வு

தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் இந்த கூடுகள் அமைக்கப்படுகின்றன

தேனீக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் மேலும் பல அற்புதங்களைக் காண்போம்.
இன்று நிலத்தடி நீர் மிக மிக அரிதாகி விட்டது. காரணம் மணல் கொள்ளை! ஆற்றுப் படுகையில் இருக்கும் அடுக்கடுக்கான மணல் தட்டுக்கள் தான் நிலத்தடி நீரின் பிடிமானங்களாக இருக்கின்றன. ஆற்றுப்படுகையில் நடக்கும் அபரிமிதமான, அளவுக்கதிகமான மணல் கொள்ளையின் காரணமாக அந்த மணற் தட்டுக்கள் பறி போய் நிலத்தடி நீர் சேமிப்பாகவில்லை.

கொள்ளையடிக்கப்படும் மணல் எங்கு செல்கின்றது? மனிதர்கள் கட்டுகின்ற மாளிகைகளுக்கு! அறிவியல் விலங்கான மனிதன் ஒரு வீட்டைக் கட்டுகின்ற போது, இன்னொரு வளத்தை அழித்து, தன்னுடைய வீட்டைக் கட்டிக் கொள்கின்றான்.
பறவைகள் சில குச்சிகளை வைத்துக் கட்டுகின்றன. எறும்பு, கரையான் போன்றவை மண்ணை வைத்து வீட்டை அமைத்துக் கொள்கின்றன. இவையெல்லாம் கூடு கட்டுகையில் தங்கள் இனத்திற்கும், மற்றவர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீட்டுக்காக மனித இனத்திற்கும், அடுத்த இனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றான்.
ஆனால் அல்லாஹ்வுடைய படைப்பின் அற்புதமான இந்தத் தேனீ, யாருக்கும் எதற்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தன் மெழுகுக் கூட்டிற்கான மூலத்தை எப்படிப் பெற்றது? யார் கொடுத்தது? தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் உள்ளன. இதில் இளைய பாட்டாளித் தேனீ அல்லது பணியாளர் தேனீ தங்களின் அடிவயிற்றுக் கிடங்கில் அமையப் பெற்றிருக்கும் மெழுகுச் சுரப்பிகளில் இருந்து மெழுகைச் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கப்பட்ட மெழுகை, தேனீக்கள் மென்று குழைத்து இந்தத் தேனடையை உருவாக்குகின்றன.
மென்று, குழைத்து, கட்டப்படுகின்ற தேன் கூட்டின் விதவிதமான அறைகளின் சுவர்கள் நன்கு காய்ந்து கனமாகி விடுகின்றன. ஆனால் அதே சமயம், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் நெகிழ்ச்சியடையும் நிலையையும், 145 டிகிரி அளவுக்கு வெப்பமூட்டப்பட்டால் உருகும் நிலையையும் அடைந்து விடுகின்றன.

இங்கு தான், கூடுகளைக் கட்டிக் கொள் (16:68) என்று அல்லாஹ் குறிப்பிடும் கட்டளையைச் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மனிதன் தான் கட்டும் வீட்டிற்காக பெரிய சிமெண்ட் கிடங்கை வெளியில் வைத்திருக்கின்றான். கட்டடத்திற்கு சிமெண்ட் மட்டும் போதாது. ஜல்லி, இரும்பு, செங்கல், மணல், தண்ணீர் என பல மூலப் பொருட்கள் தேவைப்படுகின்றன.

குறிப்பாக வீட்டுச் சுவர்களைக் கட்டும் போது, சுடப்பட்ட செங்கல்களை அடுக்கி வைத்துக் கொண்டு அதன் மீது முகட்டைப் போட்டு விட முடியாது. அந்தச் செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகள் அடைக்கப்பட வேண்டும். செங்கல்களில் ஏற்படும் இடைவெளிகளை அடைப்பதற்கு சிமெண்ட் சாந்துகளைப் பயன் படுத்துகின்றோம். மனிதனுக்கு மட்டும் தான் இந்த அறிவுத் திறன் இருக்கிறதா? என்று பார்த்தால் அல்லாஹ்வின் அற்பப் படைப்பான, அதே சமயம் அற்புதப் படைப்பான இந்தத் தேனீக்கு மனிதனை விஞ்சுகின்ற அறிவுத் திறன் இருக்கின்றது.

இந்தச் சின்னஞ்சிறு தேனீ பல்வேறு மரப்பட்டைகள், மலர் அரும்புகளில் இருந்து செந்நிறத்துப் பிசினைச் சுமந்து கொண்டு வந்து தேன் கூட்டில் உள்ள கீறல்களை, இடைவெளிகளை அடைக்கின்றன. அதில் உள்ள பாந்துகளை இந்தப் பிசின் சாந்துகளை வைத்துச் சரி செய்து கொள்கின்றன.
மனிதன் மட்டுமே தான் கட்டுகின்ற வீடுகளுக்கு அழகிய வண்ணம் (பெயிண்ட்) தீட்டுகின்றான் என்று எண்ணி விடக் கூடாது. அல்லாஹ்வின் இந்தச் சிறிய படைப்பும் தான் கட்டும் வீட்டிற்கு செந்நிறப் பிசினைக் கொண்டு வண்ணம் தீட்டிக் கொள்கின்றது. இதனால் அந்தத் தேன் கூட்டில் ஒரு பளபளப்பு பளிச்சிடுகின்றது.
இவ்வாறு இந்தச் சின்னஞ்சிறு அரிய படைப்பின் அடிவயிற்றுக் கிடங்கிலிருந்து கிடைக்கின்ற மெழுகின் மூலம் எழுகின்ற மெழுகு மாளிகையான தேன் கூடு, அந்தத் தேனீக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் சேர்த்தே பயன்படுகிறது.

இருட்டில் வாழும் இந்தக் குருட்டு மனிதனுக்கு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியாகவும், அழகு சாதனங்களுக்கும் அவனது வீட்டில் அலங்கரிக்கும் மரச் சாமான்களுக்கும் மெருகூட்டும் வண்ணக் கலவை யாகவும் அது பயனளிக்கின்றது.
மனிதன் இயற்கை வளத்தைச் சுரண்டியும், அடுத்தவரின் அல்லது அடுத்த பிராணியின் சொத்தைச் சூறையாடியும் தன் வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். ஆனால் இந்தத் தேனீயோ தன் சொந்தக் காலில் நின்று, சொந்த மூலத்தைக் கொண்டே தன் கூட்டைக் கட்டிக் கொள்கின்றது.
தாவர இனத்தில் போய் தேனீ சில சேர்மானங்களைப் பெறுகின்றது. அவ்வாறு தாவர வர்க்கத்திலிருந்து அந்தச் சேர்மானங்களைத் தானமாகப் பெற்றுவிடவில்லை. அதற்குப் பரிகாரமாக அந்தத் தாவரத்தின் மலர்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் மகரந்தச் சேர்க்கையைக் காணிக்கை யாகக் கொடுத்து விடுகின்றது.

சிலந்தியும் தன் சொந்தக் காலில் நின்று, தன் உடலிலிருந்து   உருவாகும் திரவத்திலிருந்து இழைகளைப் பின்னி வலையை அமைத்துக் கொள்கின்றது. ஆனால் அதனால் மனித சமுதாயத்திற்கு எவ்விதப் பயனும் இல்லை. மேலும் அது மனிதனுக்கு இடர் விளைவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேனீயும், தேன் கூடும் மனித சமுதாயத்திற்கு மாபெரும் பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வகையில் “கூடு கட்டுக” என்று தேனீயை நோக்கி அல்லாஹ் கூறும் கூற்று வெறும் கூற்றாக இல்லை. மனிதனின் அறிவுக் கண்ணைத் திறக்கின்ற, சிந்தனை ஊற்றாக அமைந்துள்ளது.

என் கூட்டைக் கட்டுவதற்காக மெழுகு எனும் மூலத்தை என்னுள் சுரக்க வைத்தவன் தன்னிகரில்லா என்னிறைவன் என்று அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு சாட்சி கூறி நிற்கின்றன, இந்தத் தேனீக்கள்!


அதிசயப் புதையல்! அதிரசப் படையல் .

தேன் கூடு என்பது இன்ன பிற பொடிப் பொடி ஈக்கள், பெரும் பெரும் பறவைகள் கட்டுகின்ற கூடுகள் போன்றதல்ல! அல்லாஹ்வின் அற்புதங்களைச் சுமந்து நிற்கும் அதிசயப் புதையலாகும்; அதிரசப் படையலாகும். தேன் கூடு என்பது தேனீக்கள் வசிக்கின்ற ஒரு வீடு மட்டுமல்ல!
பூக்கள் சுரக்கின்ற இன்சுவை மதுர பானம், மகரந்தத் தூள் ஆகியவை தேனீயின் வயிற்றில் போய் செரிமானம் ஆகி வயிற்றின் வழியாக வெளியேறும் அமிர்த பானமான தேனைக் காக்கின்ற, செயல் நுணுக்கம் தாங்கிய சேமிப்பு வங்கி தான் தேன் கூடு! பாலினச் சேர்க்கைக்குரிய பள்ளியறை! தேனீக்கள் பொறிக்கின்ற சினை முட்டைகளையும் அந்தச் சினை முட்டைகள் ஈனுகின்ற குஞ்சுகளையும் காக்கின்ற கரு என தேன் கூட்டின் பன்பமுகப் பயன்பாட்டைப் பட்டியல் போடலாம்
.
தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை

மரக் கிளைக்கு இடையிடையே அந்தரத்தில் தொங்கும் இந்தத் தேன் கூடு வெறும் தேன் கூடல்ல! தொங்கும் தொழில் நுட்பத் தொழிற்சாலை! அமுதம் சுரக்கும் அதி மதுரத் தேன் ஆலை! இங்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தொழில், பணி நடந்து கொண்டே இருக்கின்றது.

திட்டமிடப்பட்ட தேன் கூட்டு அறைகள்

தேனீயின் பணிகளுக்குத் தக்க தேன் கூட்டில் திட்டமிடப்பட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. தேன் கூட்டில் ஒரு பகுதி வளரும் ஆண் தேனீக்களுக்காகவும், தேன் மற்றும் மகரந்தத் தூளை சேமிப்பதற்காகவும் கட்டப்படுகின்றது.

ஆண் தேனீக்களுக்காகக் கட்டப்படும் அறைகள்

பணியாளர்களுக்காகக் கட்டப்படும் அறைகளை விடப் பெரிதாக அமைக்கப்படுகின்றன. இந்த அறைகள் மூடப்பட்டு விட்டால் ஒரு குவிமாடத்தை (உர்ம்ங்) போல் காட்சி அளிக்கும். பாட்டாளித் தேனீக்களின் அறைகள் மூடப்பட்டு விட்டால் தரை மட்டமாகக் காட்சியளிக்கும்.ஆண் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் நடுவிலும் கீழ்ப் பகுதியின் வலது புறத்திலும் கட்டப்படுகின்றன. பாட்டாளித் தேனீக்களின் அறைகள் தேன் கூட்டின் மேற்பகுதியில் இடது புறத்தில் கட்டப்படுகின்றன.

ராணித் தேனீக்களின் அறைகள்

தேன் கூட்டின் முகத்தில் நேராக, அதே சமயம் பாட்டாளித் தேனீக்களின் அறைகளுக்கு எதிராக, செங்குத்தாக ஓர் அறை தொங்கும். இது தான் ராணித் தேனீயின் அறையாகும். படுக்கை விட்டத்தில் அமைந்துள்ள அறைகள் பாட்டாளி அல்லது ஆண் தேனீக்களின் அறைகளாகும்.

குஞ்சுகளுக்குரிய அறை

குஞ்சுகள் அல்லது முட்டை அல்லது முட்டைப் புழுக்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அறையில் தான் இளம் ராணி பருவம் அடைவதற்காக வளர்க்கப்படுகின்றது. ராணித் தேனீயின் இந்த அறை சாதாரண முட்டைப் புழுக்களுக்கான அறையை விட அகலமானது. இவ்வாறு ராணீத் தேனீக்கள், ஆண் தேனீக்கள், பாட்டாளித் தேனீக்கள் எனப்படும் பெண் தேனீக்கள் என்று மூன்று வகையான தேனீக்களுக்கும் இந்தத் தேன் கூட்டில் தனித்தனி அறைகள் கட்டப்படுகின்றன.

மனிதன் என்ற அறிவியல் விலங்கு தான் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும் கட்ட முடியும். வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, ஒப்பனை அறை என்று பல்வேறு அறைகளைக் கட்ட முடியும் என்று கற்பனை செய்து கொண்டிருக்கின்றான்.ஆனால் அந்தக் கற்பனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விட்டுத் தன்னிகரற்ற முறையில் தனி பாணியில் பொறியியல் கலை நுட்பத்துடன் கூடு கட்டி, தேனீக்கள் மனிதனை, மனித அறிவை விஞ்சி நிற்கின்றன.

இதனால் தான் மனிதனின் அறிவை விஞ்சுகின்ற தேனீக்களின் இந்தத் தொழில் நுட்பக் கலையை மனிதன் கண்டறியும் வகையில் திருக்குர்ஆனில் தேனீ என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் தேனீக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.இது உண்மையில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றது. தேனீ கூடு கட்டும் விதம், அது கொண்டு வருகின்ற மகரந்தத் தூள், மொண்டு வருகின்ற தேன் மதுர இன்சுவை பானம், சிவப்பு நிறப் பிசின் போன்றவற்றைச் சேமிக்கும் பணியும் பாங்கும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு அதிர்ச்சியிலும் உறைய வைக்கின்றது.

மனிதனைப் போன்று சுற்றுப் புறச் சூழலை அழித்து தனக்கு வீடு கட்டாமல், இந்தத் தேனீக்கள், தான் கட்டுகின்ற கூட்டிற்காகச் சேமித்து வரும் மகரந்தத் தூள் மூலம் தாவர இனத்தின் உருவாக்கமும், இனப் பெருக்கமும் நடைபெறுகின்றது.தேனீக்கள் சுமந்து வருகின்ற மகரந்தத் தூள் பூக்களில் படியும் போது ஏற்படும் தாவர இனப் பெருக்கம் பற்றிய அறிவியல் ரகசிய வெளிப்பாட்டை அறியும் போது நம்முடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இதன் மூலமாக அல்லாஹ் மனித இனத்திற்கு சொல்லவருகிற படிப்பினையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் சின்னச்சிறிய படைப்பான இந்த தேனீகளுக்கே அல்லாஹ் இது போன்ற ஆற்றலை தந்துள்ளபோது இதை விட பல மடங்கு பெரிதான மனிதனான நமக்கு எவ்வளவு அறிவை தந்துள்ளான் அவ்வறிவைக்கொண்டு எப்படி தேனீக்கள் பல நிலையிலும் பலவற்றுக்கும் நன்மை பயப்பதாக அதனுடைய படைப்புகளை இவ்வுலக்கிற்கு தந்துள்ளதோ அது போன்று மனிதர்களான நாம், நமக்கும் நம்மை சுற்றி வாழ்கின்ற சமுதாயத்திற்கும் நல்லது செய்வதற்காக நம்முடைய திறமைகளை பயண்படுத்தும் போதுதான், இந்த தேனீகளை விட நாமும், நன்மை தருபவர்களாவோம்.அல்லாஹ் இதற்காண சூழ்நிலைகளை நம் உள்ளங்களில் மலரவைப்பானாக!.

தேன் கூட்டின் அமைப்பு

[தொகு]மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது

தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும்.

[தொகு]கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது

இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்த்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக, பார்க்க இரசனை அளிக்கக் கூடிய முறையிலே தேனீக்கள் கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும். இராணித் தேனீயின் குடம்பி அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாகவுமிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேன் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறைச்சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது.

[தொகு]ஒரு கூட்டில் ஒரு இலட்சம் தேனீக்கள்

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.
இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

[தொகு]Wednesday, March 23, 2011

ருத்ராக்ஷ்ம்


ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகள்.ருத்ராக்ஷ்ம் என்றால்ருத்திரன்+அஷம்=சிவன்கண்.அதாவது சிவனீன் கண்களில் இருந்து தோன்றியாதாகும்.மேலும் இதனை சிவனீன் சொரூபம் என்றும் கூறலாம். ருத்திரன் என்றால் தீமைகளை அழிப்பவன்.

ருத்ராக்ஷ்ம் தோன்றிய புராணக்கதை


முன்னொரு காலத்தில் தாரகாஷன்,கமலாஷன்,வித்யுன்மாலி என்ற அசுரர்கள் இருந்தார்கள்.இவர்களுக்கு திரிபுர அசுரர்கள் என்று பெயர். திரிபுர அசுரர்கள் கடுமையான தவம் செய்து பெற்ற வரங்கள் மற்றும் சக்திகளை கொண்டு பூலோகம் தேவலோகம் மீது படையெடுத்து சென்று மக்களையும்,தேவர்களையும் வாட்டி வதைத்தனர்.இதனால் துன்புற்ற தேவர்கள் சிவனிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர். தேவர்களின் நிலைமை கண்ட சிவன் அவர்களை காக்கும் பொருட்டு ஆயிரம் ஆண்டுகள் கண் விழித்திருந்து அகோரஸ்திரம் என்ற அஸ்திரத்தை படைத்து அந்த அஸ்திரத்தின் மூலம்  திரிபுர அசுரர்களை வதம் செய்தார். தேவர்களின் நிலைக் கண்டு வருந்தினார் அப்பொழுது சிவனின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்து ருத்ராக்ஷ்ம் மரங்களாக தோன்றின.

ருத்ராக்ஷ்ம் மரம் பற்றிய தாவரவியல் தகவல்கள்

ருத்ராக்ஷ்ம் என்பது ஒரு வகையான மரத்தின் விதைகளே ஆகும். ருத்ராக்ஷ்ம் விதைகள் அம்மரத்தின் பழுத்த பழங்களில் இருந்து கிடைக்கிறது.

ருத்ராக்ஷ்ம் மரங்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து பயன்தர 12முதல் 15ஆண்டுகள் ஆகின்றன.ருத்ராக்ஷ்ம் மரங்கள் முற்றிய நிலையில் 80அடி உயரம் வரை வளரும்.இவற்றின் ஆயுள் காலம் சராசரியாக100ஆண்டுகள் ஆகும்.இவற்றின் இலைகள் பச்சை நிறமாகவும்,பூக்கள் வெண்மை நிறமாகவும்,கனிகள் கருநீலமாகவும் இருக்கும்.

ருத்ராக்ஷ்ம்தாவரவியல்பெயர்"எலொபோ கார்பஸ்"(Eloeocarpus)என்பது பொதுப்பெயர் ஆகும்."எலொபோ கார்பஸ்ஜெனிட்ரஸ்", (EloeocarpusGenitrus),"எலொபோகார்பஸ் செர்ரடஸ்" (Eloeocarpus Serratus) என்ற பெயர்களுடன் ஏறக்குறைய 25 வகையான மரங்கள் உள்ளன.
ருத்ராக்ஷ்ம் மரம்
 
ருத்ராக்ஷ்ம் கனி


ருத்ராக்ஷ்ம் மணிகளில் இயற்கையிலே தூவாரங்கள் மற்றும் கோடுகள் அமைய பெற்றிருக்கும். இந்த கோடுகளை முகம் என்று அழைக்கிறோம். ருத்ராக்ஷ்ம் முகம் கோடுகளை கொண்டுதான் கணக்கிடபடுகின்றன.

ருத்ராக்ஷங்கள்


வ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர்.ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்!  ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1)அஸ்வினி கேது நவ முகம்
(
Alpha, Beta - Aries)
2)பரணி சுக்ரன் ஷண் முகம்
(
No 28,29,41 Taurus)
3)கார்த்திகை சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதசமுகம்
(
Pleiades)
4)ரோஹிணி சந்திரன் த்வி முகம்
(
Aldebaran Hyades,
Alpha, Theta, Gama,
Delta and Epsilon
Taurus
)
5)மிருகசீரிஷம் செவ்வாய் த்ரி முகம்
(
Lambda, Phi 1, Phi 2, Orion)
6)திருவாதிரை ராகு அஷ்ட முகம்
(
Betelgeaux - Alpha Orion)
7)புனர் பூசம் ப்ருஹஸ்பதி பஞ்ச முகம்
(
Castor, Pollux with Procyon Alpha, Beta, Gemini-Alpha Canis Minor respectively)
8)பூசம் சனி சப்த முகம்
(
Gama, Delta and  Theta of Cancer)
9) ஆயில்யம் புதன் சதுர் முகம்
(
Delta, Epsilon, Eta, Rho and Zeta Hydra)
10) மகம் கேது நவ முகம்
(
Alpha, Ela, Gama, Zeta My and Epsilon Leonis)
11)பூரம் சுக்ரன் ஷண் முகம்
(
Delta and Theta Leo)
12)உத்தரம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
(
 Beta and 93 Leo)
13)ஹஸ்தம் சந்திரன் த்வி முகம்
(
Delta, Gama, Eta, Virgo)
14)சித்திரை செவ்வாய் த்ரி முகம்
(
Spica, Alpha Virgo)
15)ஸ்வாதி ராகு அஷ்ட முகம்(Arcturus - Alpha Bootes)
16)விசாகம் ப்ருஹஸ்பதி பஞ்சமுகம்
Alpha, Beta etc Libra)
17)அனுஷம் சனி சப்த முகம்
(
Beta, Delta, Pi -Scorpia)
18)கேட்டை புதன் சதுர் முகம்
Antares Alpha, Sigma Tau Scorpio)
19)மூலம் கேது நவ முகம்
(
Scorpio, tail stars)
20)பூராடம் சுக்ரன் ஷண் முகம்
(
Delta and Epsilon Sagittarius)
21)உத்திராடம் சூர்யன் ஏக முகம் அல்லது த்வாதச முகம்
(
Zeta and Omicron Sagittarius)
22)திருவோணம் சந்திரன் த்வி முகம்
(
Altair - Alpha Aquila)
23)அவிட்டம் செவ்வாய் த்ரி முகம்
(
Delphinus)
25)சதயம் ராகு அஷ்ட முகம்
(
Lambda Aquarius)
25)பூரட்டாதி சனி பஞ்ச முகம்
(
Alpha and Beta Pegasus)
26)உத்திரட்டாதி சனி சப்த முகம்
(
Gama Pagasus and Alpha Andromeda)
27)ரேவதி புதன் சதுர்முகம்
(
Zeta Piscum)
இந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா, இருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள்.
அனைவரும் தமக்குரிய ருத்ராக்ஷங்களை அணிந்து நலம் பெறலாமே!
**********

ருத்ராக்ஷம்


ருத்ராக்ஷம்
-உயிருள்ள ஜடப்பொருள்


உலக நிகழ்வுகள் அனைத்தும் இரு தளங்களில் செயல்படுகிறது.இயற்கையனவை மற்றும் செயற்கையனவை என இருபரிமாணங்களில் செயல்படும் நிகழ்வுகள் உலக இயக்கத்திற்குமூலமாக அமைந்துள்ளதுவேதாந்தம் இதையே புருஷத்துவம்மற்றும் ப்ரகிருதி என விளைக்குகிறதுஇருவகையன செயல்அனைத்து நிகழ்வுகளில் பிரதிபலிக்கிறது என்பது பலருக்குதெரியாதுவேதாந்த உண்மையான இந்த இரு செயல்களைபுரிந்துகொண்டோமேயானால் இயற்கையின் செயல்படுகளைபுரிந்துகொள்ளமுடியும்

இயற்கையின் தன்மை சாஸ்வதமானதுஇயற்கை என்பதுஉருவக்கப்பட்டது அல்ல இயற்கை என்னும் சொல் இருக்கிறது,இருந்தது மற்றும் எப்பொழுதும் இருக்கும் என்பதயே குறிக்கும்.ப்ரகிருதி என்பது செயற்கை தன்மையை குறித்தாலும்இதுதற்காலிகமானது மற்றும் இதன் உருவாக்கத்திற்கு மூலம்புருஷத்துவமே ஆகும்.அறிவியலை எடுத்துக்கொண்டோமானால் சக்கரம்கண்டுபிடித்தது என்பதுதான் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனகூறமுடியும் . சக்கரத்தின் செயல்கள்வடிவம் மற்றும் தன்மைஇயற்கையில் உள்ள பொருளை சார்ந்து இருப்பதைஅறிவோம்.செயற்கை என்பது இயற்கையின் பிரதிபிம்பம் எனகூறலாம்ஆனால் இயற்கை தன்னிகரற்றது.

ஆயுர்வேதத்தில் இந்த உலகம் மூன்று முக்கியமான குணத்தால்இயங்கிவருகிறது என கூறுவார்கள்முக்குணத்தை(தோஷங்கள்வாதபித்தகப குணம் சொல்லுவதைகேள்விப்பட்டுள்ளோம்இந்த 
இயற்கையன மூன்று குணங்கள்மனித உடலில் சமநிலை தருவதால் நோய் ஏற்படுவதாகஆயுர்வேத சாஸ்திரம் கூருகிறதுமனித உடலில் தோஷத்தில்ஏதவது ஒன்று ஓங்கி நிற்கும்.இயல்பான மூன்று தோஷங்கள் புருஸார்த்தம் (இயற்கையானது)என்றும் மனித உடலில் ஏற்படும் தோஷ ஏற்றத்தாழ்வுகள்ப்ரகிருதித்துவம் (செயற்கையானதுஎன்றும்வகைபடுத்துகிறார்கள். உபவேதமானஆயுர்வேதத்தில் வேதாந்தசாரமான புருஷப்ரகிருதி தத்துவம் செயல்படுவதற்கானசான்றை விளக்கியுள்ளேன்.

நமது வாழ்க்கையில் இயற்கை,செயற்கை தத்துவம் எவ்வாறுசெயல்படுகிறது என பார்ப்போம்மனித உடல் என்பது இயற்கையின் படைப்புஇதை புருஷார்த்தம் என கூரலாம் . ஆணும்பெண்ணும் இணைந்து உருவாக்கும் பொழுது புருஷத்துவம்கொண்ட மனித உடல் ப்ருகிருதித்துவம் பெருகிறதுநமதுஇயற்கையான (புருஷார்த்தகுணம் என ஒன்று உண்டுஆனால்சமூக நடத்தைக்காக நாம் உருவாக்கிய குணதிசயங்கள்ப்ருகிருதித்துவம் எனும் செயற்கைத் தன்மையை சாரும்நான்கூறும் இது போன்ற உதாரணங்களால் புருஷத்துவம் மேலானதுப்ருகிருதித்துவம் கீழானது என எண்ணுதல் கூடாது.புருஷத்துவமும்பிருகிருதித்துவமும் இணைந்தால் மட்டுமேவாழ்வியல் சிறப்பாக இயங்கும்.

இறைதன்மையை விளக்கும் மதங்கள் இயற்கை தன்மையானபுருஷத்துவமே மூலம் என கூருகிறார்கள்புருஷத்துவமேஅனைத்து 
விஷயங்களுக்கும் ஆதாரமானது என்பது அனைத்துமதத்தின் விளக்கம்அதனால் தான் சில மதங்கள் ஒரே கடவுள்எனும் கொள்கையை கொண்டுள்ளதுபாரதத்தில் தோன்றியமதங்கள் மட்டுமே புருஷ-ப்ருகிருதி இணைவே உண்மையானஇறை நிலை என ப்ரகடனப்படுத்தியதுபுருஷ நிலையை சிவன்என்றும்,ப்ருகிருதி நிலையை சக்தி என்றும் விளக்கினார்கள்.சிவன் ஆண் தன்மை சக்தி பெண் தன்மை என விளக்க காரணம்சிவநிலை என்பது அசைவற்றதுசக்திநிலை என்பதுஅசையக்கூடியது.(இயங்கும் தன்மைஎன்ற வேறுபாட்டால்தான்

சிவ-சக்தி நிலை என்பதை சீனர்கள்(யாங்-யன்
எனவகைப்படுத்தினார்கள்இயற்கையில் செயற்கை தன்மையும்,செயற்கையில் இயற்கைத் தன்மையும் கலந்துள்ளது என்பதன்கருத்தே யாங்-யன் தத்துவம் ஆகும்இத்தத்துவத்தின்அடிப்படையிலேயே நமது சாஸ்திர சம்பிரதாயங்கள்அமைந்துள்ளனபருத்தி என்பது இயற்கையன ஒரு தாவரம்,இதை பயிரிட்டு,நூலாக்கி ஆடை அணிதல் என்பதுசெயற்கையான செயல்பாடு

இயற்கையான பருத்தியில் எதிர்காலத்தில் உருவகப்போகும்ஆடையும்ஆடையில் இயற்கையான பருத்தியும் கலந்திருப்பதுசிவசக்தி நிலையை குறிக்கும்இதனால்தான் சக்தி வழிபாடுசெய்பவர்கள் அதிக ஆடை அணிகலன் அணிவதும்,இயற்கையான சிவநிலையில் இருப்பவர்கள் ஜடாமுடியுடன்நிர்வாணமாக இருப்பதும் ஆன்மீக இயல்பாக இருக்கிறது.

சிவ தத்துவத்தில் இருக்கும் முனிவர்கள் வைத்திருக்கும்பொருட்களை கவனித்தால் சங்குஜடாமுடிமண்டை ஓடு,ருத்ராஷம்,மிருக தோல் 
அனைத்தும் இயற்கையாக கிடைத்தபொருட்கள்.

இந்த பொருட்களை செயற்கையாக உருவாக்க முடியாதுசிலபொருட்களை உருவாக்கினாலும் செயற்கை என தெரிந்துவிடும்.
ப்ரபஞ்சத்தின் படைப்புத் தன்மை புருஷ தன்மையிலிருந்துதுவங்குகிறதுபுருஷ தன்மை என்பது இயக்கமற்றதுபுருஷத்தன்மைக்கு கால தேச வித்தியாசம் இல்லைபிரகிருதிக்கு காலபரிமணமும் உண்டுபிறந்த குழந்தை புருஷ தன்மையில் தேச,கால வித்யாசம் இன்றி இருக்கிறதுவளர்ந்த மனிதன் புருஷநிலையில் இருந்து பிரகிருதி நிலைக்கு மாற்றமடைந்து தனக்குள்கால மற்றும் தேச வித்தியாசத்தை அடைகிறான்.

ப்ரகிருதி நிலையை அடைந்த மனிதன் மீண்டும்புருஷத்துவத்தை அடையவே மீண்டும் ஜபம்தியானம் மற்றும்யோகம் எனும் ஆன்மீக வழிகள் 
உருவாக்கப்பட்டுள்ளன.செயற்கை நிலையில் இயங்கக்கூடிய மனிதன் இயற்கை நிலைஎனும் நிர்விகல்ப சமாதியை அடைய அவனுக்கு இயற்கையனபொருட்கள் உதவுகிறதுஇயற்கை பொருட்கள் மூலம் மனிதன்தனது சுயதன்மையான புருஷ நிலையை அடைய முயற்சிக்கும்பொழுதுஅதிகம் பயன்படுவதும் எளிமையாக கிடைப்பதும்ருத்ராஷம் எனும் இயற்கையானமணிகள் ஆகும்.

சைவ சம்பிரதாயத்தில் மட்டும் ருத்ராஷம் பயன்படுத்துவதாகஅனைவரும் நம்புகிறார்கள்ஆனால் சனாதான தர்மம் எனஅழைக்கப்படும் பாரத 
தேசத்தின் அனைத்து ஆன்மீக மார்க்கமும்ருத்ராஷத்தை பயன்படுத்திய சான்றுகள் உண்டுகுறிப்பாகருத்ராஷத்தை மட்டும் நான் இங்கு விளக்க காரணம் உண்டுபிறஆன்மீக வஸ்துக்களை காட்டிலும் ருத்ராஷத்தை பற்றி நிறையமுரண்பாடான தகவல்கள் உலவுகிறதுதெரியவேண்டியவிஷயம் மறைக்கப்பட்டும்தேவையற்ற விஷயங்கள்உண்மையாக்கப்பட்டும் மக்களிடையே குழப்பத்தை உண்டுசெய்கிறதுஇந்த தெய்வீகம் நிறைந்த ருத்ராஷத்தை பற்றிவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனாலேயேஏற்பட்டது.

ருத்ராஷம் எனும் இயற்கையில் விளையும் இந்த காய் (விதை)கனி வடிவம் பெருவதில்லைஅத்தி பூக்காது விதை அளிப்பதுபோல ருத்ராஷம் விதை தன்மை கொண்டது.மித வெப்பமும்மிதமான குளிரும் கொண்ட பகுதிகளில் ருத்ராஷம் விளைகிறது.

நேபாள தேசம் மேலே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலையில்இருப்பதால் அதிகமான ருத்ராஷத்தை விளைவிக்கும் நாடாகதிகழ்கிறது
இந்தியாவில் அதிக அளவில் ருத்ராஷம்கிடைப்பதில்லைமேலும் ருத்ராஷத்தை பயிர் செய்துவிளைவிக்க முடியாதுருத்ராஷ மரக்கன்று நம் தோட்டத்தில்வளர்க்கும் பொழுது இயல்பான வளர்சியையோருத்ராஷத்தின்வடிவத்தையோ பெறுவதில்லைநேபாள தேசத்தில்பெரும்பாலும் ருத்ராஷ மரத்தோட்டம் வைத்திருப்பவர்கள் கூடஅதை ஒரு இயற்கையான வன பகுதியாக வைத்திருக்கிறார்கள்.நேபாளத்திற்குப் பிறகு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ருத்ராஷம் இயற்கையாக கிடைக்கிறது.

ருத்ராஷத்தின் வடிவம்அதில் உள்ள துளை அனைத்தும்இயற்கையானதுபார்க்கும்பொழுது எந்த வித செயல்படும்இல்லாத பொருளாக 
தெரிந்தாலும் ருத்ராஷத்திற்குள்புதைந்திருக்கும் ஆற்றல் விவரிக்க முடியாத ஒன்றுசாதாரணஒரு மரத்தின் விதையில் என்ன ஆற்றல் இருக்க முடியும் எனஎதிர்வாதம் செய்பவர்கள் கேட்பதுண்டு.

மணல் துகள்கள் மூலம் செய்யப்பட்டு தாமிர கம்பிகளால்இணைக்கப்பட்ட கணிப்பொறியின் சில்லு(Chip) 
வேலைசெய்வதையும்உலகின் பல கிலோ மீட்டர் தூரம்இடைவெளியில் இருக்கும் இருவரையும் தொடர்பு கொள்ளசெய்வதை நாகரீக மக்கள் நம்மில் அனேகர் உண்டுஉயிரற்றமணல் இது போன்ற செயலை செய்யும்பொழுது உயிருள்ளதாவரவிதை ஏன் இதைக்காட்டிலும் அதிக செயல்களை செய்யமுடியாது ? என சிந்திப்பதில்லை.

கணிப்பொறி சிப்பை மட்டும் கையில் வைத்திருந்தால் அதுவேலை செய்யாதுஅதற்கு தேவையான இணைப்புகள்,
மின்சாரம் வழங்கி தகுந்த நிபுணர்களை நியமித்தால் அவர்கள்அந்த கணிப்பொறி சிப்பை வேலை செய்ய வைப்பார்கள்அதுபோல சிறந்த ருத்ராஷத்தை தேர்ந்தெடுத்துஆன்மீக ஆற்றல்கொண்டவர்களிடம் சக்தியூட்டப் பணிந்தோம் என்றால்அத்தகைய ருத்ராஷம் பிரஞ்சத்தின் சிறு மாதிரி வடிவமாகிஉங்களை பிரபஞ்சத்தை கையில் வைத்திருப்பவராக மாற்றும்.