Tuesday, March 22, 2011

கதிர்வீச்சு


கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால் ?


முடிகொட்டுவது முதல்...


மனித உடலில் பல வகையில் 
அணுக்கதிர் வீச்சு
 பரவ வாய்ப்புள்ளது. காய்ச்சல் 
முதல் கேன்சர் 

வரை வரும் ஆபத்து உண்டு. 
தோல் வியாதிகளும் வரும்.

8 தலையில் 100 ரெம் வரை கதிர்வீச்சு ஏற்பட்டால், அதனால் 
தலைமுடி 2 வாரத்தில் கொட்டி விடும்.  
8 வாந்தி, பேதி ஏற்படும். அதனால், வேறு கோளாறுகளும் 
ஏற்படும்.

8 ரத்தத்தில் கலந்து விட்டால், அதில் ரசாயன மாற்றத்தை 
ஏற்படுத்தும்.
 அதாவது ரத்தம் கெட்டு விடும். 
8 ரத்தக்கொதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
8 உடலில் மைய நரம்பு மண்டலம் மிக முக்கியமானது. 
அதில் கதிர்வீச்சு பாய்ந்தால், மூளையில் இருந்து 
சிறுநீரகம் வரை பாதிக்க வாய்ப்புண்டு.
 இதில் 2 ஆயிரம் ரெம் வரை வீச்சு ஏற்படுமாம்.  
8 குடலையும் கதிர்வீச்சு பாதித்தால் ரத்தப்போக்கு 
அதிகரிக்கும். 
கடைசியில் மரணம் தானாம். 

மில்லிரெம் என்றால்
கதிர்வீச்சை கணக்கிடுவது மில்லிரெம் என்று 
அளவையால் 
கணக்கிடப்படுகிறது. மனித உடலில் 
சாதாரணமாகவே
 ரசாயனம், வெப்பம் போன்றவற்றால் 300 மில்லிரெம் 
கதிர்வீச்சு
 உள்ளது. ஆனால், அணுக்கதிர் வீச்சு , உடலில் 
பரவினால் அதன் 
ஆபத்துக்கு அளவே இல்லை. 

இதுவரை 3 விபரீதம்
கடந்த 1969ல் சுவிட்சர்லாந்தில் லுசென்ஸ்
அணுஉலை, 1979ல் 
அமெரிக்காவில் த்ரீமைல் தீவு அணுஉலை,
 1986ல் உக்ரைனில் 
செர்னோபில் உலை ஆகியவற்றில் இப்படி
விபத்து ஏற்பட்டுள்ளது. 
பல லட்சம் பேர் இன்னமும் கூட ஊனமாகவும்,
வியாதிகளால்
 பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது தான் உண்மை.
இப்போது 
இந்த வரிசையில் ஜப்பான் அணுஉலைகள். 

வீட்டுக்குள் முடக்கம்

கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை 
அறிவிப்பை வெளியிடும். அதைத்தான் ஜப்பான் அரசு,
மக்களுக்கு 
விடுத்துள்ளது. வீட்டுக்குள் முடங்க வேண்டும்; வெளியில்
 வரகூடாது; 
ஜன்னல், கதவுகளை காற்றுபுகாவண்ணம் இறுக்கமாக
மூட வேண்டும். துணிகளை கூட வெளியில் காயப்போடக்கூடாது
 என்றெல்லாம் அதிரடி கட்டளைகளை போட்டுள்ளது.
மக்கள் இப்போது சோறு, தண்ணீர் 
சாப்பிடக்கூட பயந்து கதிகலங்கிப்போயுள்ளனர். 


புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு தாக்கத்தை நிறுத்த முடியவில்லையென்றால், கடைசி நடவடிக்கையாக, கான்கிரீட் கலவை மூலம் அணு உலைகளை புதைக்க ஜப்பான் விஞ்ஞானிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் புகுஷிமா பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
மிகப் பெரிய பேரழிவு என்பதால், அங்கு மின் இணைப்பை உடனடியாக தர முடியவில்லை. இதனால் அணு உலைகளின் கூலிங் சிஸ்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படாமல் போனது.  இதனால் வெப்பம் அதிகரித்து 3 அணு உலைகளின் கான்கிரீட் சுவர்கள் வெடித்தன. 4வது அணுஉலை தீப்பிடித்து எரிந்தது.  இதனால் அணுஉலையில் உள்ள யுரேனியம் மற்றும் புளுடோனியம் எரிபொருள்களிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறின. அணுஉலையை குளிர்விக்க ஜப்பான் விஞ்ஞானிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்கவில்லை.

உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணுமின்நிலையத்தில் கடந்த 1986ம் ஆண்டு நடந்த விபத்தில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டபோது கான்கிரீட் கலவை மூலம் அணு உலைகள் புதைக்கப்பட்டன.  கடைசி நடவடிக்கையாக இந்த முறையைப் பின்பற்ற ஜப்பான் இன்ஜினியர்கள் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளனர். புகுஷிமா அணுமின்நிலையத்துக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நாளை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கூலிங் சிஸ்டத்தை இயக்கி, மின்உலையை குளிர்விக்க முயற்சிகள் எடுக்கப்படும். இது பலனளிக்கவில்லையென்றால் கான்கிரீட் கலவை மூலம் புகுஷிமா மின்நிலைய அணுஉலைகள் புதைக்கப்படும். அதன்பின் கதிர்வீச்சு பாதிப்பு இருக்காது.
மனநிலை பாதிப்பு
பூகம்பம், சுனாமி, கதிர்வீச்சு தாக்கம் போன்றவற்றால் நிலைகுலைந்து போயிருக்கும் ஜப்பான் மக்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து, சுனாமி தாக்கியது. இதையடுத்து புகுஷிமா அணு மின்நிலையத்தில் இருந்து கதிர்வீச்சு பரவி வருகிறது. அதை தடுக்க தீவிர முயற்சியுடன் மின்நிலைய ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய தொடர் பாதிப்புகள் ஜப்பான் மக்களுக்கு மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த எவிலின் ப்ரூமெட் என்பவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் அமைந்துள்ள த்ரீ மைல் தீவு பகுதியில் அமைந்திருந்த அணுமின் நிலையத்தில் கடந்த 1979ம் ஆண்டு கதிர்வீச்சு தாக்குதல் ஏற்பட்டது. கேன்சர் ஏற்படுத்தும் அளவுக்கு கதிர்வீச்சு அபாயம் இல்லை. ஆனால், அணுமின் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து  பல முரண்பாடான தகவல்கள் வெளியாயின. இதன் பாதிப்புகள் குறித்து பல தகவல்கள் வெளியானதால் மக்கள் பீதியடைந்தனர். அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும், உடல் நல பாதிப்புக்கு ஆளானார்கள். பலருக்கு தலைவலி, வயிற்றுவலி போன்றவை ஏற்பட்டது. அவர்களின் மனநிலை குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் சோதனை நடத்தியது. இதில் தாய்மார்கள், சிறு குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருந்தது தெரிந்தது. அவர்களிடம் பேட்டி எடுத்தபோது, அவர்கள் அதிக மனஅழுத்தத்தில் இருந்து தெரிந்தது.
சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கழித்து அவர்களிடம் சோதனை நடத்தப்பட்ட போதும், அவர்களிடம் மனஅழுத்தம், பதற்றம் அதிகமாக இருந்தது தெரிந்தது. எந்தவிதமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் 75 சதவீத மக்கள் இருந்துள்ளனர். இதேபோல் உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் கடந்த 1986ம் ஆண்டு விபத்து ஏற்பட்டபோதும், ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கீவ் என்ற பகுதியில் குடியேறினர். அவர்களை அங்குள்ள மக்கள் வரவேற்கவில்லை. கதிர்வீச்சு பாதிப்பு பற்றி அவர்களிடம் பல வதந்திகள் பரவியது. உடல் ஆரோக்கியம் பற்றி அவர்கள் அதிக கவலையடைந்ததால், மனநல பாதிப்புக்கு ஆளானது தெரிந்தது. இதேபோல் தற்போது சுனாமியில் வீடுகளை இழந்து, கதிர்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகியுள்ள ஜப்பான் மக்களுக்கும் மனநிலை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து அணு உலைகள் வெடித்தன.
இந்நிலையில் மக்களை கொன்றும் குவிக்கும் அளவிக்கு மிக மோசமாக கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கண்கலங்கியவாறு டோக்கியோ மின் அணு உலை தலைமை அதிகாரியான Akio Korimi பேட்டியொன்றில் தெரிவித்துள்ளதாக சில சர்வதேச செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அழுதபடி பேட்டியளிக்கும் அவரது படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவற்றிலிருந்து வரும் கதிர்வீச்சை கட்டுப்படுத்தவும் அணு உலைகளை குளிர்விக்கவும் கடுமையாக போராடி வருகிறது ஜப்பான்.

அணு உலைகள் மீது விமானமூலமும் தரையிலிருந்தும் தண்ணீரை கொட்டும் நடவடிக்கைகளினால் அணு உலைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூற முடியாது எனவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கதிர்வீச்சின் தாக்க அபாய எச்சரிக்கையை இன்று ஜப்பான் அதிகரித்திருந்தமையானது 1979 இல் பெனுசிலாவியாவில் Three Mile Island  அணு உலை விபத்தின் போது ஏற்பட்ட கதிர்வீச்சு தாக்கத்தின் அளவுக்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானிய அரசு தொடர்ந்து கதிர்வீச்சின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் இன்னமும் அதிகமான அபாய கட்டத்தை தாண்டவில்லை எனவும் தெரிவித்து வருகின்றது. எனினும் கதிர்வீச்சு தாக்கம் தொடர்பான உண்மையை ஜப்பான் மறுத்து வருவதாக ஜப்பானிய மக்கள் விசனம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக நாடுகள் பலவும் ஜப்பானில் இருக்கும் தங்கள் பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment