Thursday, March 17, 2011

அமானுஷ்ய சக்தியும் , யோக வழியும்

மீண்டும்  ஒரு தொடர் கட்டுரையில் ஆன்மீக உறவுகளை சந்திப்பதில் மனம் மகிழ்வடைகிறது.   பொதுவாக மானிடர்க்கு  அமானுஷ்யம் என்பதிலே அதிக ஆர்வம் உண்டு.  அந்த அமானுஷ்ய சக்தியின் மீது உள்ள ஈடுபாடுகள்தான் பெரும்பாலும் அவர்கள் ஆன்மீகத்தை நோக்கி வர காரணமாகின்றது.  

அந்த அமானுஷ்ய சக்தியினை மிகவும் பெரியதாகவும், அதனால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்றும் அந்த சக்தியினை கைவரப் பெற்றவர்களே
அருளாளர்கள் , சித்தர்கள் ,ரிஷிகள், மகான்கள் என்றும் 
நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  அத்தகைய கூற்றுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

மனிதனால் செய்ய முடியாத காரியங்களை செய்யக் கூடிய வல்லமை அந்த அமானுஷ்ய சக்திக்கு உண்டு என்ற எண்ணமும் நமக்கு உண்டு.

ஆனால் அந்த சக்தியினை கொண்டஅருளாளர்கள் , சித்தர்கள் ,ரிஷிகள், மகான்கள் பெரும்பாலும் அவற்றை ஒரு பொருட்டாக கருதாமல் இறைக் கலப்பினையே அவர்கள் தங்களின் முக்கிய நோக்கமாக கொண்டார்கள் என்பதை நாம் இங்கே முக்கியமாக கருத வேண்டும்.

யோக நெறியிலே  கைவரப் பெறும் அந்த சக்திகள் அந்தப் பாதையிலே தென்படும் மலர்க் கொத்துக்கள் என்று சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி தனது யோக சூத்திரத்திலே விளக்குகிறார்.  அந்த சக்திகளிலே சாதகன் தனது மனதை செலுத்தினால் கீழ் நிலைக்கு வர நேரிடும் என்று அவர் எச்சரிக்க தவறுவதில்லை.

நம்மை பொறுத்தவரை யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும்தான் நினைக்கிறோம்.

ஆனால் அருளாளர்கள் தங்கள் வந்த பணி முடித்த பின் யோக வழியிலே தான் இறைக் கலப்பினை அடைந்தார்கள்  என்றால் அதன் சிறப்பினை விளக்க இங்கே வார்த்தைகளில்லை.

. யோகம் தான் ஆன்மீக வழிக்கு அடிப்படையாக அமைகிறது. தனக்குள்ள பலவற்றைக் கொண்டுள்ள ஒரு பொக்கிஷமாக திகழ்கிறது. யோகம் இல்லாது ஆன்மீகத்தில் எதுவும் இல்லை.


ஒவ்வொரு மானிடரும் தான் உடல் அல்ல , மனம் அல்ல, ஆன்மாதான் என்று உணரவேண்டும்.
ஏன் என்றால் ஆன்ம விடுதலை நமது பிறப்புரிமை. 
பிறவித் தளைகளிலிருந்து ஆன்மா விடுபட யோக அறிவியல் நமக்கு உதவுகிறது. 

அந்த இறைக்கூறான ஆன்மாவை அடையும் வழியினை தான் பதஞ்சலி மகரிஷி யோக சூத்திரமாக வடித்து வைத்தார்.


 அந்த யோக நெறியினை 8 படிக்கட்டுகளாய் அமைத்து  யோக வழியினை செம்மைப் படுத்தி யோகத்தின் தந்தை எனப் பெயர் பெற்றார்  பதஞ்சலி மகரிஷி .

படிக்கட்டுகளாய் அமைந்த யோக கொள்கைகளை தனக்கே உரிய பாங்கில்
ஒவ்வொன்றாய் அருட் குருவின் அருளாசியுடன்  ஸ்வார்த்தம் சத் சங்கம்  விளக்கி வருகிறது. இனியும் அவரருளால் விளக்கும்.


மகரிஷி பதஞ்சலி யோக கேந்திரத்தை பொறுத்தவரையில் யோகாசனத்தை
(யோகம் + ஆசனம் ) என்றவாறு தான் கையாளுகிறது.  
இதில் யோகம் என்பது மனதிற்கும் , ஆசனம் என்பது உடலிற்குமான பயிற்சியாக கற்பிக்கப்படுகிறது. மேலும் இதுவே சரியான ஒன்றாகும்

எனவே தான்

உடலுக்கோர் நல்ல உழைப்பு ஆசனம் 
மனதிற்கோர் நல்ல மருந்து யோகம்
என்று வரையறுக்கிறது  மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்.

ஆசனம் என்ற உடற் பயிற்சியினைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வயதினர்க்கும் அவர்களின் எலும்புகளின் நெகிழ்வுத் தன்மைக்கு ஏற்ப  மற்றும் உடல் வாகு, நோயின் தன்மைக்கு ஏற்ப  பயில்பவர்களுக்கு ஆசனங்களை வரையறுக்கிறது  மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம்.

சில குறிப்பிட்ட ஆசனங்களை செய்தாலே பயில்பவர்களுக்கு போதுமானது.  வரும் பதிவில் ஆசனங்களை பற்றி சற்றே விரிவாக செய்முறை விளக்கத்துடன் காண்போம்.

1 comment:

  1. Lucky Club Casino Site 2021 - Lucky Club Live
    Lucky Club Casino has more than 1000 games from the well known and successful provider of 카지노사이트luckclub online casino games. Play and win free coins! No deposit required.

    ReplyDelete