ஆரோக்கியம்

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்வோம்...

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killercells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது.
எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.


5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

 நம்ம உடம்புல ஆக்ஸிஜன் சரியான அளவுல இருக்கும் போது கேன்சர் அண்டாது. அதுனால உடற்பயிற்சி செய்யறதும், மூச்சுப்பயிற்சி செய்யறதும் ஆக்ஸிஜன் அளவை சரியா வச்சுக்க உதவி செய்யும். ஆக்ஸிஜன் தெரபி‍னு வந்திருக்கற புது வழியும் நல்லதுதான்னாலும் நம்ம கைவசம் வெண்ணையை வச்சிக்கிட்டு எதுக்கு அலையணும்.

யோகா செய்ங்க, நிறைய நடங்க, புது நண்பர்கள், மனசு விட்டு பேசுங்க.


அவ்ளோதான். போயே போச்செல்லாம் இல்லை. வராமலே தடுத்திடலாம் கேன்சர் நோயை. என்ன சொல்றிங்க.


சில முக்கியமான விஷயங்கள்: பெரிய நோ நோ

1. மைக்ரோ வேவ்ல பிளாஸ்டிக் பாத்திரங்கள் கண்டிப்பா வேண்டாம்

2. தண்ணீர் பாட்டிலை ஃப்ரீஸரில் வைக்க வேண்டாம்

3. பிளாஸ்டிக் பேப்பர் சுத்தி மைக்ரோவேவ் ல எதுவும் வைக்கவேண்டாம்

பிளாஸ்டிக்கு பதிலா ஓவன்க்குன்னே விக்கற பாத்திரங்கள் யூஸ்
பண்ணிக்கோங்க.

இதெல்லாம் நம்ம நல்லதுக்கு தானேங்க...

வருமுன் காப்போம்!


கேன்சரின் காரணங்கள் என்னவென்று தெளிவாக இது வரை மருத்துவர்களால் கூற முடியாவிட்டாலும்,என்னை பொருத்தவரை கேன்சரின் பாதிப்புக்குகளுக்கு முக்கிய காரணம் விழிப்புணர்வுயின்மை என்றே சொல்லுவேன் . தொடக்கத்திலேயே கண்டுபிடித்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்,சிகிச்சையிலும்நிறைய பலன்களை பெறலாம். அதுவுமில்லாமல் நம் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் கவனமாக இருப்பதன் மூலம் இந்த நோய் வருவதை தவிர்க்கலாம்.நமது கவனமின்மையால் முற்றிப்போன பிறகு கண்டுபிடித்துவிட்டு மல்லுக்கட்டும் நிலையை தவிர்த்தாலே,இந்த நோயின் கொடூரத்தை எதிர்க்கொள்ள பெருமளவு வசதியாக இருக்கும்!
அதற்கான விழுப்புணர்வையும்,அறிமுக அறிவையும் இந்த தொடர் உங்களுக்கு அளித்தால்,நான் இதை எழுதியதற்கான பலனை பெற்றதாக உணர்வேன்.

சரி சரி!! மொக்கை போட்டது போதும்,தொபுகடீர்னு மேட்டருல குதிக்கலலாமா??? இந்த கேன்சர்னா என்னபா மொதல்ல??? இரத்த புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் இப்படி உடம்புல ஒரு இன்ச் விடாம எங்கிட்டு பாத்தாலும் வருது??அப்படி என்னதான் நடக்குது ஒடம்புல??? ஏன் அதை குணப்படுத்த இவ்வளவு கஷ்டமா இருக்கு??
நம்ம உடம்பு அப்படின்னு எடுத்துக்கிட்டா என்னன்ன இருக்கு?? கை,காலு,கண்ணு,மூக்கு....உடம்புக்குள்ளாரன்னு பாத்தா இதயம்,மூளை,நுரையீரல்,சிறுநீரகம் அப்படின்னு எத்தனையோ உறுப்புகளை பார்க்கிறோம்.ஆனா அடிப்படையா நம்ம உடம்புல எல்லாமே உயிரணுக்களால(cells) ஆனது. எலும்பு சதை ரத்தம் எல்லாமே கடைசியா பாத்தீங்கன்ன உயிரணுக்களால ஆனதுதான். ஆனா ஒவ்வொறு உறுப்புக்கும் உயிரணுக்கள் வித்தியாசமா இருக்கும்.அதாவது நுரையீரல்ல இருக்கற உயிரணுக்கள் மூளையில இருக்கற உயிரணுக்களை விட சற்றே மாறுபட்டு இருக்கும்.இந்த உயிரணுக்கள் பல கோடி எண்ணிக்கைல நம்ம உடம்பு முழுக்க இருக்கு.இவைகள் தினமும் நம் உடலில் உருவாகிக்கொண்டும் அழிந்துக்கொண்டும் இருக்கின்றன்.ஒவ்வொரு உயிரணுவும் இப்படி தான் இருக்கனும் அப்படின்னு ஒரு நியதி இருக்கு.அது நமது மரபணுவை(Genes) பொருத்து அமையும்.அதுக்கு ஏத்தா மாதிரி தான் ஒவ்வொரு உயிரணுவும் உருவாகிட்டு இருக்கும்.


இது மாதிரி ஒழுங்கா உருவாகிட்டு அழிஞ்சிகிட்டு இருந்தா பிரச்சினையே இல்ல. ஆனா சில சமயம் இந்த மாதிரி நியதியை விட்டு சில உயிரணுக்கள் வித்தியாசமாக உருவாக ஆரம்பிக்கும்.அது மட்டும் இல்லாமல் தன்னை போலவே வித்தியாசமான உயிரணுக்களை அசுர வேகத்தில் உருவாக்கித்தள்ளிக்கொண்டே போகும்.
அட!!அது பாட்டுக்கு உருவாக்கிட்டு போகட்டும்,அதனால என்ன?? இதனால லேசா அங்கிட்டு இங்கிட்டு வீங்கி வேணா போகலாம்,இதனால உயிருக்கு ஆபத்து வர அளவுக்கு அப்படி என்ன பிரச்சினை அப்படின்னு கேக்கறீங்களா???இந்த வகை உயிரணுக்கள் மேலும் தன்னை போன்ற மற்ற உயிரணுக்களை உற்பத்தி செய்து தள்ளிக்கொண்டு இருக்கும் என்று போன பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்.இருந்தா இருந்துட்டு போகட்டும்,அதனால என்ன,இதனால என்ன பிரச்சினை அப்படின்னு நீங்க கேக்கறீங்க!!

என்ன மாதிரி நீங்களும் பாசக்கார பயலுவ தானே,அதுவும் வந்தாரை வாழ வைக்கும் இனத்துல வேற பொறந்துட்டோம், அதான் என்னை மாதிரி உங்களுக்கும் இந்த கேள்வி தோனுது.ஆனா பாருங்க இந்த வித்தியாசமான உயிரணுக்கள் சும்மா இருக்கறது இல்லை ,சாதுவாக தான் உண்டு தன் கடமை உண்டுன்னு சுத்திட்டு இருக்கற மத்த உயிரணுக்களை இது தாக்கி அழிக்க ஆரம்பிக்குது,அதுமில்லாமல் உடலில் தன்னுடைய இடத்தை விட்டு வேறு ஒரு உறுப்புக்கு ஏல்லாம் போக ஆரம்பிக்குது.ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான உயிரணுக்கள் உண்டு அப்படின்னு போன பகுதியில சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா?? இது பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்திக்கிட்டு இருந்தா என்னத்துக்கு ஆகறது?? அதாவது ஒரு டாக்டரு மருத்துவமனைக்கு போய் வேலை செய்யனும்,என்னை மாதிரி மென்பொருள் வல்லுனர்கள் ஆபீசுக்கு போய் வேலை(?!) செய்யனும். எங்களை ஏதாச்சும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ஆணி பிடுங்க சொன்னா காமெடி தான்!!

ஒரு 100 பேரு சுறுசுறுப்பா சீரா வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்,அதில் ஒரு பத்து தொழிலாளிகள் வேலையும் செய்யாமல்,மற்ற தொழிலாளிகளையும் தன்னை போல மாற்றிக்கொண்டு தங்கள் வேலை செய்யும் வட்டத்தை விட்டு மத்த வட்டங்களுக்கும் சென்று பிரச்சினை செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்,அப்பொழுது தொழிற்சாலை என்னத்துக்கு ஆகறது?? சீக்கிரமே திவாலாகி போக வேண்டியதுதான். இப்படிப்பட்ட நிலைமை தான் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலுக்கும் ஏற்படுகிறது.
ஒழுங்கா சொன்ன பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கற உயிரணுக்களில் எப்படி திடீர்னு இந்த கேன்சர் உயிரணுக்ளாக உருவாக ஆரம்பிக்கின்றன????

ஒழுங்காக இருக்கும் உயிரணுக்களில் இந்த மாதிரியான மாறுந்தன்மை(mutation) வருவதற்கு ஒரு வித நச்சுப்பொருளே காரணம்.இந்த நச்சுப்பொருள் உருவாக்கும் காரணிகளை carcinogens என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.புகையிலை,கதிர்வீச்சு மற்றும் நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்கள்,சில கொடிய தொற்றுநோய் கிறுமிகள் போன்றவற்றை இந்த carcinogens பட்டியலில் சேர்க்கலாம். இந்த நச்சுப்பொருள்களை ஒரே அளவு உட்கொண்ட இரு வேறு நபர்களில் ஒருவருக்கு கேன்சர் வரலாம்,ஒருவருக்கு வராமல் போகலாம்.அது அவரவரின் மரபணு,உடல் நிலை,வயது,உடம்பில் உள்ள DNA-க்களுடன் இந்த carcinogen-களின் செயல்பாடு இப்படி பல விஷயங்களை பொருத்தது. புகையிலை ஒரு முக்கியமான carcinogen என்பதால் தான் புகை பிடிப்பது,புகையிலை போடுவது ஆகியவற்றை நிறுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துவதற்கு முக்கியமான காரணம்.(சாம் தாத்தா,இது உங்களுக்கு தான்!! :-))

இப்படியாக உருமாறும் உயிரணுக்களால் மற்ற உயிரனுக்களிடம் பரவி கேன்சர் ஒருவரின் உடலை அரிக்கத்தொடங்கி விடுகிறது.உடலில் உள்ள எந்த பகுதியில் உள்ள உறுப்பிலும் இந்த கேன்சர் வரலாம் என்றாலும் முக்கியமாக மக்களை பாதிக்கும் சில கேன்சர் வகைகளை கீழே பார்க்கலாம்.

1.)Prostate Cancer (prostate என்பதற்கு தமிழ்ல என்ன வார்த்தைனு தெரியல மக்கா,இது ஆண்களிடையே முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
2.)நுரையீரல் புற்றுநோய்
3.)Colorectal cancer(Colon-க்கு தமிழ்ல என்னபா??அங்கிட்டு வர புற்றுநோயாம் இது)
4.)சிறுநீரகப்பை புற்றுநோய்(Bladder cancer)
5.)மார்பகப்புற்றுநோய் (இது பெண்களிடம் முதன்மையாக காணப்படும் புற்றுநோய்)
6.)இரத்தப்புற்றுநோய்(Leukemia or blood cancer,இது இளைஞர்களிடையே அதிகமாக காணப்படும் புற்றுநோய்)
7.)சிறுநீரக புற்றுநோய் (nephroblastoma /wilms tumour) மற்றும் நரம்பு மண்டல புற்றுநோய்(neuroblastoma-CNS central Nervous system tumour) - இது குழந்தைகள் இடையே அதிகமாக தோன்றும் புற்றுநோய்
8.)Cervical cancer (இது பெண்களிடையே அதிகமாக தோன்றும் மற்றுமொரு புற்றுநோய்)


மேற்குறிப்பிட்ட வகைகள் எல்லாம் பரவலாக காணப்படும் புற்றுநோய்கள்,ஆனால் உடம்பில் பல பாகங்களிலும் இந்த புற்றுநோய்கள் வர வாய்ப்புண்டு. வயதாக ஆகத்தான் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் இந்த நோய் எல்லா வயதினருக்கும் வரலாம்.கருவில் உள்ள சிசுவுக்கு கூட இந்த நோய் வரலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
உலக அளவில் உயிரிழப்புகளில் 13 சதவிகிதம் கேன்சரினால் ஏற்படுகிறது.2007-இல் மட்டும் உலகளவில் 76 லட்சம் பேர் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 25% சாவுகள் கேன்சரால் ஏற்படுகிறது. அதாவது நாலு பேரில் ஒருவர் கேன்சரால் உயிரிழக்கிறார்....
சரி சரி!!
போதும் நிறுத்து!! நீ என்ன சொல்ல வரேன்னு தெரியுது!! இப்போ இந்த நோய்க்கு எப்படி சிகிச்சை தருவாங்க?? இந்த நோயை முழுமையா குணப்படுத்த முடியுமா??
அப்படின்னு கேக்கறீங்களா??
இது நோயை குணப்படுத்துவதுக்கு கொஞ்சம் மெனக்கெடனும் மக்களே!!
நோயின் தீவிரம்,இதை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிக்கப்பட்டது,நோயாளியின் வயது,சிகிச்சையை தாங்கிக்கொள்ளும் திறன் போன்ற பல விஷயங்களை பொருத்து இந்த நோய்க்கான சிகிச்சையும்,குணப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் மாறு படும்!! நீங்க யோசிச்சிட்டிருக்கறது போல எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்கறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!! கண்டுபிடிச்ச அப்புறம் நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகப்படுத்துவாங்க ,ஆனா பரவலான சில வழிமுறைகளை இப்போ பாக்கலாம்.

கீமோதெரபி:புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கவல்ல மருந்துகளை மாத்திரை வடிவில் கொடுத்து குணப்படுத்துவது தான் கீமோதெரபி எனப்படும்.குறிப்பாக உயிரணுக்களின் பல்கிப்பெரிகும் தன்மையை குலைப்பதே இந்த மருந்துகளின் முக்கிய பணி.மற்ற சிகிச்சை முறைகளை போல இந்த முறையிலும் புற்றுநோய் உயிரணுக்களுடன் சேர்த்து நல்ல உயிரணுக்களும் பாதிக்கப்படும்,ஆனால் சிகிச்சை முடிந்த பின் புற்றுநோய் அல்லாத உயிரணுக்கள்் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பி விடும்.
இரத்தப்புற்றுநோயை பொருத்த வரை கீமோதெரபியின் வீரியம் அதிகமாகும்பொழுது புற்றுநோய் உயிரணுக்களோடு சேர்த்து ஆரோக்கியமான உயிரணுக்களும் பெருமளவில் அழிந்துபோய் உடம்பில் எதிர்ப்பு சக்தியே முழுவதுமாக முடங்கிப்போகலாம்.அந்த மாதிரியான சமயத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை (Bone marrow transplant) எனப்படும் ஒரு சிகிச்சை அளிக்கப்படும். ஒருவரின் உடலில் ரத்தத்தின் உற்பத்தி எலும்பு மஜ்ஜையில் இருந்துதான் உருவாகிறது என்பதால் அதை புதிதாக பொருத்துவதன் மூலம் அழிந்துப்போன இரத்த உயிரணுக்களுக்கு பதிலாக புதிதான உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன.

அறுவைசிகிச்சை:உடலில் ஒரு பகுதியில் கேன்சர் உருவாகியிருக்கும் போது அந்த பகுதியை மட்டும் அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவது .இது புற்றுநோய் எந்த அளவு பரவியுள்ளது என்பதை பொருத்தே சாத்தியப்படும். நான் முன்பே கூறியிருந்தது போல புற்றுநோய் உயிரணுக்கள் கண்ட மேனிக்கு இங்கிட்டும் அங்கிட்டும் சுத்த ஆரம்பிக்கும் என்பதால் அவை அப்படி பரவும் முன்னரே அறுவைசிகிச்சை செய்தால் உண்டு. கட்டியை வெட்டி எடுத்த பிறகும் சில உயிரணுக்கள் ஒளிந்து கொண்டிருந்து பின்னொரு காலத்தில் தலை தூக்கலாம்.ஆனால் இந்த பிரச்சினை மற்ற சிகிச்சை முறையிலும் உண்டு.

கதிர்வீச்சு சிகிச்சை:உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் கதிரிவீச்சினை செலுத்தி பாதிக்கப்பட்ட உயிரணுக்களை கொல்வது இந்த வகையான சிகிச்சையில் செய்யப்படும் முறை.இப்படி கதிர்வீச்சு செலுத்தும்போது பாதிக்கப்பட்ட உயிரணுக்களோடு நல்ல உயிரணுக்களும் சேர்ந்தே தான் அழிந்து போகும் ஆனால் பாதிக்கப்படாத உயிரணுக்கள் திரும்பவும் தானே உருவாகிக்கொள்ளும். இந்த வகை சிகிச்சையில் கடுமையான பக்கவிளைவுகளும் உண்டு.

கேன்சரின் விளைவுகளுக்கான சிகிச்சை:எல்லாவிதமான சிகிச்சையும் பலனளிக்காத போது,நோயை குணப்படுத்துவதற்கான நிலையை தாண்டிய பின், நோயினால் நோயாளிக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க சிகிச்சை அளிக்கப்படும்.இந்த சிகிச்சைக்கு Symptom control அல்லது Palliative treatment என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.பாதிக்கப்பட்டவருக்கு உண்டாகும் உடல்சோர்வு,வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த சிகிச்சையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட முறைகள் தவிர வேறூ சிகிச்சை முறைகளும் கையாளப்படலாம்,ஆனால் முக்கியமான முறைகளை மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
சரிபா!!நீ சொல்லுறது புரியுது! இந்த நோய் வந்துருச்சான்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு கேக்கறீங்களா??
திரும்பவும்,கேன்சரில் பல வகைகள் இருப்பதால் எல்லாவற்றிற்கும் ஒரே அறிகுறி கிடையாது,குத்துமதிப்பா சில அறிகுறிகளை கீழே காணலாம்.

அரிப்பு,சிறு கட்டிகள்இருமல்,எலும்பு முறிவு,ரத்தக்கசிவு போன்றவை.பாதிக்கப்பட்ட இடத்தில் வலி,ஆனால் புற்றுந்நோயின் ஆரம்ப காலத்தில் வலி அவ்வளவாக இருக்காது,நோய் சற்றே முற்றிய பின் தான் இந்த வலி தோன்ற ஆரம்பிக்கும்.உடல் எடை இழப்பு,உடல் சோர்வு,பசியின்மை ஆகியவையும் இந்த நோய்க்கான அறிகுறிகள்.
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் கேன்சருக்கு மற்றுமின்றி பிற்பல உடல் உபாதைகளுக்கும் வரலாம் என்பதை மறக்க வேண்டாம்.

இப்படி அறிகுறிகள் காட்டிக்கொடுத்தாலும் நோய் இருப்பதை அறிய ரத்தப்பரிசோதனை,Xray,CT scan மற்றும் Endoscopy ஆகிய முறைகளை பயன்படுத்துவார்கள்.இதன் மூலம் ஆறிந்துக்கொண்ட பின் பாதிக்கப்பட்ட உறுப்பிள் இருந்து மாதிரி திச்சுக்களை உடலில் இருந்து வெட்டியெடுத்து ஆய்வு செய்து உறுதிப்படுத்துகிறார்கள்
தாய்மார்கள் மார்பகப்புற்றுநோய்க்கு சுய பரிசோதனை செய்துக்கொள்வதற்கான வழிமுறையை இந்த சுட்டியில் சென்று பார்க்கலாம் .இந்த பகுதியில இந்த நோயிடம் இருந்து தப்பிக்க நாம என்னெவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள்:
கேன்சரை தவிர்க்கவேண்டும் என்றால் கேன்சருக்கு காரணமான carcinogens-களை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது தான் புத்திசாலித்தனம்.அப்படி நாம் சிந்திக்கும்போது நமது நினைவில் முதலில் வரும் பொருட்கள் இந்த குடிப்பழக்கம் மற்றும் புகை பழக்கமும் தான். நுறையீரல் புற்றுநோய் வந்த ஆண்களின் 90% பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. புகைப்பழக்கம் மட்டுமல்லாது குட்கா,பன்மசாலா போன்ற புகையிலை சம்பந்தமான மற்ற பழக்கங்களையும் அறவே நிறுத்துவது இந்த நோயை தவிர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.

உணவப்பழக்கம்:
ஒழுங்கா வேளைக்கு சாப்பிடறது நாம நிறைய பேர் அலட்சியமா எடுத்துக்கற ஒரு விஷயம்.ஆனா நாம எளிமையா கையாளக்கூடிய இந்த பழக்கத்தினாலேயே பல நோய்கள் அண்டாம நிம்மதியா ஆரோக்கியத்தோட வாழலாம்.உணவில் கனி காய்கறிகளை சேர்த்துக்கொள்வது,நொருக்கு தீனியை குறைத்து ஒழுங்கான உணவு வகைகளை சாப்பிடுவது,நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை நமது உணவுமுறையில் நாம் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டிய பழக்கங்கள்.உணவுமுறை பற்றி ஷாலினி அவர்கள் போட்டிருக்கற பதிவையும் அதில் அவங்க கொடுத்திருக்கற சுட்டிகளையும் வேணா ஒரு சுத்து பாத்துட்டு வந்திருங்க! :-)

உடல் பருமன்:
மாறி வரும் நமது வாழ்க்கை சூழலில் நாம் அன்றாடம் இங்கும் அங்கும் நடந்து போவதே மிகவும் குறைந்து விட்டது.கடைசியாக எப்பொழுது ஓடினோம் என்றே நினவில் இல்லை.அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் நிலை இன்னும் மோசம்.வீட்டிலிருந்து கார்,காரிலிருந்து அலுவலகம்,அலுவலகத்தில் இருந்து கார் என்று எண்ணி ஒரு நாளுக்கு 100 - 200 அடிகளுக்கு மேல நடப்பதே இல்லை.இதனால் உடல் பருமன் அதிகமாக நம் உடல் வாகு மோசமாவதோடு புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் உங்கள் உடல் தோரணம் கட்டி வரவேற்க ஆரம்பித்து விடுகிறது.
வளர்ந்த நாடுகளில் உள்ளது போல் உடற்பயிற்சி பற்றி அவ்வளவாக நம் நாட்டில் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. ஜிம் என்றாலே ஏதோ ஆர்னால்டு ஷிவாஜிநகர்(:P) போன்ற பயில்வான்கள் மட்டுமே செல்லும் இடம் என்ற எண்ணம் இன்னும் பலர் நெஞ்சில் உறுதியாக உள்ளது. உடற்பயிற்சி கூடம் செல்ல முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நடைபழக்கமாவது தொடர்ந்து செய்யும் பழக்கத்தை உருவாக்கிக்கொண்டால் நீரிழிவில் இருந்து புற்றுநோய் வரைக்கும் பல நோய்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.
கூடவே தொப்பையையும் குறைக்கலாம்!!

மருத்துவ பரிசோதனை:
முறையாக மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரமே அறிந்துக்கொள்ள பெருமளவு உதவும். இரண்டாம் பகுதியின் பின்னூட்டத்தை பார்த்தால் இந்த நோய்க்கு அவ்வளவாக பெரிய அறிகுறிகள் இல்லாததால் இதை சீக்கிரமே அறிய முடிவதில்லை என்று பலர் கூறியிருப்பதை பார்க்கலாம்.இதனால் நாமே சென்று அவ்வப்போது பரிசோதனை செய்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகிவிடுகிறது.போன பதிவின் பின்னூட்டத்தில்,் நியூசீலாந்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் கட்டாயமாக மார்பகப்புற்று நோய்க்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ,ஐம்பது வயது மேற்பட்டோருக்கு இந்த பரிசோதனையின் செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும துளசி டீச்சர் தெரிவித்தார்.பரிசோதனை மையத்திற்கு போகாவிட்டாலும் சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் பெண்கள் தாமாகவே பரிசோதனைகளை செய்துக்கொள்வது இந்த நோயை சீக்கிரம் கண்டுபிடிக்க உதவும்.

தொடர்ந்து வரும் அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்:
ஒருவருக்கு தொடர்ந்து இருமல் ,பேதி,எடை குறைவு,காரணமில்லாமல் உடல் சோர்வு போன்றவை இருந்தால் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நன்று.எனக்கு தெரிந்த ஒரு நண்டரின் உறவினர் ஒருவர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் முதலில் தன் உடலில் கொஞ்சம் வீக்கம் இருப்பதை தெரிவித்தபோது ஏதாவது கட்டியாக இருக்கும் என்று தட்டிக்கழித்து விட்டார்களாம்.என்னடா ஒரே பூச்சாண்டி காட்டுகிறானே என்று நினைக்க வேண்டாம்.நம்மிடையே விழிப்புணர்வு இல்லாததால் தவிர்க்கக்கூடிய பல வலிகளை நாம் தேவையில்லாமல் வரவைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவுபடுத்தவே இதை கூறுகிறேன்.
இதற்காக நாளையே ஏதாவது தும்மல் இருமல் வந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்று பயந்து விடவேண்டும் என்று அர்த்தமில்லை.ஆனால் நாளைக்கே இந்த நோய் வந்தாலும் கூட தைரியமாக போராடவும்,அதை தவிர்க்ககூடிய வழிமுறைகளை தெளிவாக தெரிந்துக்கொண்டு சந்தோஷமாக வாழவும்தான் இந்த பதிவு.
கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்.