சௌந்தர்ய லஹரி


ஆதி சங்கரர் பரமேஸ்வரனின் அவதாரம். மௌன நிலையில் இருக்கும் dhakshinaa மூர்த்தி தான் ஷங்கரர் உருவில் வேதங்களுக்கும் உபநிடங்களுக்கும் விளக்க உரை, ஸ்தோத்திரங்கள், வrதம் எல்லாம் பண்ணினார்.
ஆசார்யாளை ஈஸ்வரன் அம்பாள் இரண்டு பேரும் சேர்ந்த அவதாரம் என்று சொல்லவேண்டும். காரியம் இல்லாத பிரம்மம் சிவன். தக்ஷிணா மூர்த்தி ரூபத்தில் உள்ளே அடக்கிக் கொண்டிருந்த சித் சக்தியான அம்பாள் சங்கரர் உருவில் வெளியே ஆவிர்பவித்து இருக்கின்றாள். மாதா, பிதா, குரு என்று சொல்லுகின்றோம். ஜெகன் மாதாவும் ஜெகத் பிதாவும் சேர்ந்து இப்படி ஜெகத் குருவாக அவதரித்து இருக்கின்றார்.
இந்த உலகில் அனைத்தையும் நடத்தும் ஷக்தி பரப்ரஹ்மம். நிர்குனமான அறிவிற்கும் அப்பாற்பட்ட பரப்ரம்மத்தை உபாசிக்க முடியாதவர்கள் அதன் சக்தி இடம் மனதி பக்தி மார்கத்தில் திருப்பிவிட்டால் ஆத்மா ஸ்வரூபத்தை பற்றிய ஞ்யானம் பெற முடிகிறது. இதை அனுசரித்து பகவத் பாதாள் பக்தி மார்கத்தை ஞ்யான மார்கத்திற்கு பூர்வாங்கமாக வைத்து போஷித்தார். பாரதம் முழுதும் புண்ணிய ஸ்தலங்களுக்கு பாத யாத்திரை செய்து அங்கங்கே யந்திரங்களை ஸ்தாபித்தார். ஆலய பூஜா கிராமங்களை ஏற்படுத்தி கொடுத்தார்.
'சௌந்தர்யா லஹரி' ஆச்சார்யாரின் ஸ்ருஷ்டிகளில் உதித்த உன்னதமான பக்தி இலக்கிய காவியம். பகவத் பாதாளின் பிரதீபா சக்தியை காட்டும் சிதரமான சிருஷ்டி சௌந்தர்ய லஹரி தான். இந்த காவியம் சிகரினி என்னும் மீட்டரில் அமைந்துள்ளது.
சங்கரர் கைலாயம் சென்று பார்வதி பரமேஸ்வரனை தரிசித்தார் அப்போது ஈஸ்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடி கட்டையும் குடுத்தார். சுவடியில் அம்பாளை பற்றிய நூறு ஸ்லோகங்கள் இருந்தன. பஞ்ச லிங்கங்கள் அரூப்பமான ஈஸ்வரன் அம்சங்கள். மந்த்ரமயமான ஸ்லோகங்கள் நூறும் அம்பாள் ஸ்வரூபம். ஷங்கரர் ஈஸ்வரனின் அவதாரம். கொடுத்தவர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்டவர் சங்கரர் (ஈஸ்வரர்) வாங்கிக்கொண்ட பொருள் (அம்பாள்) ஸ்லோகங்கள் எல்லாமே ஒன்று தான். இதிலே அத்வைதம் த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன. பஞ்ச லிங்கங்களையும் ஸ்தோத்ர சுவடியையும் பெற்று கொண்ட சங்கரரை நந்திகேஸ்வரர் வழி மறித்து அவர் கையில் இருந்த சுவடியை பிடித்து இழுத்தார். ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை நந்திகேஸ்வரர் தன்வச படிதிகொண்டார். இழந்த ஐம்பத்தி ஒன்ட்பது ஸ்லோகங்களையும் கையில் இருக்கும் நாப்பத்தி ஒரு ஸ்லோகங்களை சேர்த்து பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அம்பாளின் ஆக்ன்யை போலும். கடல் மடை திறந்தது போல் ஷங்கரர் அம்பிகையை கேசாதி பாதமாக வர்ணித்து பாடி நூறு ச்லோகனகளையிம் பூர்த்தி பண்ணி விட்டார்.
நாம் அம்பிகையிடம் நீங்காத நிஜ பக்தி கொள்ள வேண்டும் என்ற ஒரே பலனை உத்தேசித்து சௌந்தர்ய லஹரி யை பாராயணம் செய்தாலே போதும். அவரவர் அனுபாவம் பக்குவம் படிப்பு பண்பு வாழ்கை நிலை ஆகியவற்றை பொறுத்து ச்லோகங்களுக்கு ஏராளமான உள் அர்த்தங்கள் தோன்றும்.