Tuesday, December 14, 2010

ஆன்மீகம்

மகாலட்சுமி


"பொன்னரசி நாரணணார் தேவி புகழரசி மின்னுநவரத்னம் போல் மேனி அழகுடையாள் அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோம்%27.

(மகாகவி பாரதி)

மனிதரொருவனைப் பரிபூரணமான நிறைமனிதனாக்குவது வீரம்,செல்வம்,கல்வி என்பனவாகும். பொருள்வளம்,செல்வவளத்திற்கு அதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமியாவாள். அத்தகைய மகாலெட்சுமி அம்சங்களைக் கொண்டவர்கள் பெண்களேயாவர். எனவேதான் பெண்களை வீட்டுக்கு விளக்கேற்ற வந்த இல்லத்தரசி மகாலட்சுமியென்று இன்றும் கூறும் மரபு உண்டு. அத்தகைய பெண்கள் தெய்வீகம் வாய்ந்த பெண்தன்மையான மென்மைக் குணங்கட்கு மீறி நடப்பார்களேயானால் அவர்கள் பேய்களுக்குச் சமம் என அறிவாளிகள்,சான்றோர் கூறுவர்.

மகாலட்சுமியானவள் அதிகமாக அநேகமாக பசுவின் பின்புறம் யானையின் முகம்,தாம்பூலம்,மலர்திருவிளக்கு,நறுமணமுள்ள சந்தனம்,கன்னிப்பெண்கள், உள்ளங்கை, பசுமாட்டின் காற்×சி, வேள்விக்புகை போன்ற இடங்களையெல்லாம் தனது வதிவிடமாக்கிக் கொண்டாள். ஸ்ரீ மகாலட்சுமியானவள் ஸ்ரீரங்க ஷேத்திரவிருட்சமரத்தில் வில்வம் போன்றவற்றை நாடுபவள்.வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் வில்வமரத்தைப்பேணுவதும் ஸ்ரீ மகாலட்சுமிக்குப் பிரியமானதாகும். சூரியனைப் போன்ற ஒளியுடைய ஸ்ரீ மகாலட்சுமியே உன்னருளால் உண்டாகிய "வனஸ்பதி%27 என்று புகழ்பெற்ற வில்வமரம், அதனுடைய பழம் எங்கள் மனதையும் புற இந்திரியங்களையும் பற்றியுள்ள அஞ்ஞானத்தையும் மங்களமற்றவற்றையும் நீக்கிவிடும்.

தேவர்கள் சாவா மருந்தாகிய தேவாமிர்தம் பெறுதற்பொருட்டுத் திருப்பாற்கடலைக் கடையவிரும்பி மேருமலையை மந்தாகவும், வாசுகியென்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு ஒருபுறம் தேவர்களும்,மறுபுறம் அசுரர்களுமாக நின்று திருப்பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீ மகாலட்சுமியுடனே சந்திரன், கௌத்துவமணி,காமதேனு முதலியன வெளிவந்தன. இவைகள் யாவும் ஸ்ரீ மகாலட்சுமிதேவியுடன் சிறந்தவைகளாகும்.

தாமரைமலர் ஸ்ரீ மகாலட்சுமியுடன் பிறந்தவனான சந்திரனைக் கண்டதும் அவனை வெறுத்து இதழ்களைக் குவிக்கும் பழக்கத்தை வழக்கமாகக்கொண்டது. இதனைக் கண்ட மகாலட்சுமி தாமரை மலரில் அதிகமாக வசிக்காது தன்னுடன் பிறந்த கௌத்துவ மணிக்குப் பெருவாழ்வு கொடுக்க எண்ணி அதனை அணிகின்ற திருமாலின் மார்பில் நித்தியவசிப்பிடம் கொண்டாள்.இதனால் மக்கள்உலகவர் உடன் பிறந்தோரை வெறுத்துச் சினங்காது நேசமாகவும் அந்நியோந்நிய உறவுடன் இருப்பதனையுமே ஸ்ரீமகாலட்சுமி அதிகம் விரும்பிப் பேரருள் புரிவாள். மகாலட்சுமியானவள் நெல்லிமரத்திலும்,நெல்லிக்கனியிலும் அதிக விருப்பமுடையவள்.இவை எங்கெங்கெல்லாம் காணப்படுமோ அங்கங்கெல்லாம் ஸ்ரீ மகாலட்சுமி வாசஞ்செய்வாள். நெல்லிக்கனி சாப்பிடுவதால் ஆரோக்கியமும் புண்ணியமும் கிடைக்கின்றன.ஆனால், வெள்ளிக்கிழமைகளிலும் இரவிலும் உண்ணக்கூடாது.நெல்லிமர நிழலிலே அன்னமளிப்பது மிகவும் சிறப்பானது. துவாதசியன்று நெல்லிக்காயை உணவிலே சேர்த்தால் ஏகாதசி பலனுண்டு.

வெண்ணிற மாடப்புறாக்கள் வாழும் இடங்கள் கலகம் என்பதையே அறியாத பெண்கள் வதியும் வீடுகள்,தானியக் குவியல்கள் உமிசிறிதுமில்லாத அரிசிக் குவியல்,எல்லாருடனும் பகிர்த்துண்டு வாழும் மனிதன்,இனிமையோடும் கனிவோடும் இருக்கும் மனிதன், நாவடக்கம் உள்ளவன்,உணவு உண்பதிலே அதிக நேரம் போக்காதவன், பெண்களைத் தெய்வமாக மதிப்பவன் இவர்களிடத்தில் ஸ்ரீ மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.வலம்புரிச் சங்கு, நெல்லிக்காய்,கோமயம்,தாமரை வெண்மை, பரிசுத்தமான ஆடை அணிகளிலும் ஸ்ரீ மகாலட்சுமி நித்தியவாசம் செய்வாள்.

ஸ்ரீ மகாலட்சுமிக்கு வேண்டத்தகாதவைகளும்/ செய்யத்தகாதவைகளும்:

பூஜைகளிற் பயன்படுத்தப்பட்ட மலர்கள், கெட்டமணம் வீசும் மலர்கள், அழுக்கான இடத்திற்படுத்தல், உடைந்த ஆசனப்பலகையை உபயோகித்தல், அவலட்சணமான பெண்ணின் உறவு என்பனவற்றை அறவே வெறுத்து நீக்கவேண்டும்.

மயானக்கரி,சுடுகாட்டெலும்பு,அக்கினி விபூதி, அந்தணன்,பருத்திவிதை,பசு,உமி,

குருவின் திருவடி, எச்சில் இவைகளைக் காலால் மிதித்தல் கூடாவரம்.

தன்னுடைய ஒருகாலை மற்றொரு காலாலே தேய்த்துக் கழுவுதல்,ஈரக்காலுடன் படுத்தல்,இருக்கும்போதும் படுக்கும்போதும் கால்களை ஆட்டுதல் கூடாது.

சதுர்த்தசி,அமாவாசை, காலை, மாலை உடலற்ற தலையற்ற நட்சத்திர நாள்களிலும் மாதர் உறவு ஆகாது.ஆடையில்லாமல் குளிக்கவோ,படுக்கவோ ஆகாது.அழுக்கான ஆடைகளை அணிதல் கூடாது.துடைப்பத்தின் தூசி, ஆட்டீன் காற்×சி, கழுதைப் புழுதி,பெண்களின் நடைப்புழுதி மனிதர் மீது படுதல் ஆகாது.வில்வம் விலக்கப்பட்ட காய்கறிகள், தயிர் ஆகியவற்றை இரவில் உண்ணுதல் ஆகாது.இருட்டிற் படுத்தல் கூடாது.எச்சிற்கையாற்றலையைத் தொடுதல் ஆகாது.இடது கையாற் தீண்டிக்கொண்டும் சோம்பேறிபோல் இருப்பதும் ஆகாது.ஆண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து முழுகக்கூடாது.அமாவாசையில் வாசனைப்பொடி தேய்த்துக்குளித்தல் ஆகாது.அசுத்தமாக இருக்கும்போது சூரிய, சந்திரரைப் பார்த்தல் கூடாது.சூரிய உதயத்திற்கு முன் படுக்கைவிட்டு எழுதல் வேண்டும்.நகம்,முள்,இரத்தம்,மண்கட்டி,கரி இவற்றால் நிலத்தில் கீறுதல் கூடாது.சந்தனம்,சுகந்தம்,புஷ்பம்,தண்ணீர்,இரத்தினம்,கடல் இவற்றைக் கண்டால் வணங்குதல் வேண்டும்.

நீங்காத செல்வம் நிறைந்து வாழ விரும்பின் பிறர் தேடிவைத்த பொருளிலும் பிறர் மணந்த மாதரிடத்தும் மனத்தைச் செலுத்துதலாகாது.

பெருந்தீனியின்றி மனிதர் அளவோடு உண்ண வேண்டும்.அன்னத்தை சோற்றைக் கவளமாக உருட்டி விளையாடுதல் ஆகாது.

முகம்,செவி,மூக்கு,பாதம்,முதுகு,இருகால்கள்,இரு கண்கள் ஆகிய இடங்களிலே சந்தனம் பூசுதல் ஆகாது.முற்கூறப்பட்டவற்றை அவதானித்து அனுசரித்து ஒழுகிவந்தால் ஸ்ரீ மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும்.

அஷ்ட இலட்சுமிகள் எழுந்தருளியிருக்கும் இடங்கள்

அபயம் தரும் திருக்கரங்களுடையவளாய் தாமரை மலர் மாலை அணிந்த கழுத்தினளாய் இருபக்கங்களிலும் இரு தீபங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்,தாமரை மலரில் வீற்றிருப்பவள் ஆதிலட்சுமி எனப்படுவாள்.

தண்ணீர் நிறைந்த குடம்,கத்தி,அபயம்,சிசு(பிள்ளை)இவைகளை நான்கு கரங்களில் வைத்திருப்பவளும் இரண்டு சக்திகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தாமரை மலரிலே வீற்றிருப்பவளும் சந்த õனலட்சுமி என்று அழைக்கப்படுவாள்.

இரண்டு திருக்கரங்களிலும் இரு தாமரை மலர்களையும் இருகரங்களில் வரத,அபயங்களையும் தாங்கிக் கொண்டு இருப்பவளும் யானைகளால் அபிடேகம் செய்விக்கப்படுபவளும் கஜலட்சுமி எனப்படுவாள்.

சங்கு,சக்கரம்,குடம்,தாமரைமலர், வில்,அம்பு,கூடை,அபயம் இவற்றைத் தாங்கும் எண்கரத்தினளும் தங்கம் போன்ற திருமேனியுடையவளும் தனலட்சுமி எனப்படுவாள்.

வரதம்,அபயம்,தாமரைமலர்,கரும்பு இவைகளைத் தரிக்கும் நான்கு திருக்கரங்கள் உடையவளாயும் சம்பா நெற்பயிர்,வாழைமரங்கள் முதலியவற்றால் சூழப்பட்டவளாயும் தானியச் செல்வத்தை அளிப்பவளாயும் இருப்பவள் தான்ய லட்சுமி எனப்படுவாள்.

சக்கரம்,சங்கு,வரதம்,அபயம்,பாசம்,அங்குசம்,கத்தி,கேடயம் இவற்றை எட்டுக் கரங்களில் தரித்திருப்பவளும் விஜயா என்ற பெயர் கொண்டவள் இராஜ்யலட்சுமி எனப்படுவாள்.

இரண்டு தாமரை மலர்களையும் வரத,அபயங்களையும் தாங்குகின்ற நான்கு கரத்தினளாய் இரண்டு யானைகளால் பூசிக்கப்படுபவளாய் வெண்ணிற பட்டாடை தரிப்பவளாய்,தாமரை மலரில் வீற்றிருப்பவளாய் இருப்பவள் சௌபாக்கிய லட்சுமியாவாள்.

வரதம்,அபயம்,வில்,அம்பு,சங்கு,சக்கரம்,சூலம்,கபாலம் இவற்றைத் தரித்திருப்பவள் வீரலட்சுமி எனப்படுவாள்.

உலகிலுள்ள பெரிய வணிக நிறுவனங்கள்,நகைமாளிகைகள்,வர்த்தக நிலையங்கள்,சைவாலயங்கள்,விஷ்ணுவாலயங்கள் என்பவற்றிலே ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் திருவுருவப்படங்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணமுடியும்.வங்கிகளிலும் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் கூட ஸ்ரீ மகாலட்சுமியின் திருவுருவம் தென்படும்.செந்தாமரை மலரை உறைவிடமாக கொண்ட உருவமே பெருமளவில் காணப்படுகின்றன.மகாலட்சுமியை "ஸ்ரீதேவி, "அலைமகள், "பொன்னரசி, "இலட்சுமி, "செல்வமகள், "செந்தாமரை ராணி, "திருமகள், "மங்களலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுகிறாள்.மகாலட்சுமியின் கணவன் மகாவிஷ்ணுமூர்த்தியாவார்.நாமும் நவராத்திரி தினத்திலே ஸ்ரீ மகாலட்சுமிதேவியை பக்தியுடன் தொழுது செல்வவளம் செழிக்கப்பெற்று ஆனந்தவாழ்வு வாழ்வோமாக.

No comments:

Post a Comment