Wednesday, December 29, 2010

பயிர்க்காப்பீடு



பயிர்க்காப்பீடு

வேளாண் உற்பத்தியாளர், விவசாயிகள், ஆடு மாடு வளர்ப்பவர்கள் இயற்கை சீற்றங்களான மழை, வறட்சி, பனி, வெள்ளத்தால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதால்(அ) வேளாண் பொருட்களின் விலை குறைவதால் வருமான இழப்பு ஏற்படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுவது தான் பயிர் காப்பீடு.

இந்தியாவில் பயிர்காப்பீடு

இந்தியாவில், பயிர்சாகுபடியின் போது ஏற்படும் காலநிலை மாற்றம், பூச்சி மற்றும் நோயால் அதிக சேதங்கள் ஏற்படுகின்றன. இதிலிருந்து காத்துக்கொள்ள பயிர்க்காப்பீடு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது, அனைத்து இடர்களின் ஒட்டு மொத்த பயிர் காப்பீடு திட்டம் 1985-ம் ஆண்டு 7-ம் ஐந்தாண்டு திட்டத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. தொடாந்து தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தால் (1999-2000) மாற்றியமைக்கப்பட்டது. இந்தத் திட்டங்கள் வருகின்ற வருடங்களின் திட்டமிடுதல், அதைப்பற்றிய படிப்புகள் ஆராய்ச்சிகளால் காலத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி சமைக்கப்பட்டு வருகிறது. இந்திய வேளாண் காப்பீட்டு.

நிறுவனம் (AIC): இந்த நிறுவனம் இந்திய அரசால் 2002-03, பொதுபட்ஜெட் அறிக்கை வெளியிடும்போது அமைக்கப்பட்டது. இந்த திட்டதிதால் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யவும், வளம் குன்றா வேளாண்மை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு, வேளாண் காப்பீட்டுக்கென  ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது.

தேிசய வேளாண் காப்பீடு திட்டத்தை இந்தியாவின் பொது காப்பீட்டு நிறுவனத்தால் -FY03 வரை அமல்படுத்தும் வரை இந்த AIC நிறுவனம் தான் அமல்படுத்தியது. எதிர்காலத்தில், இந்த நிறுவனம் நேரிடையாக அல்லது மறைமுகமாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்து தொழில்களுக்கு காப்பீட்டு வணிகப் பணியை செய்யும்.

பங்கு மூலதனம்
அனுமதித்த பங்கு மூலதனம் ரூ.1,500 கோடி
செலுத்திய பங்கு மூலதனம் ரூ.200 கோடி
மேம்படுத்தவர்கள்
நிறுவனம்
பங்கு மூலதனம்%
இந்தியபொது காப்பீட்டு நிறுவனம்
35.00
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
30.00
தேசிய காப்பீட்டு நிறுவனம்
8.75
நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம்
8.75
ஒரியண்டல் காப்பீட்டு நிறுவனம்
8.75
யுன்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம்
8.75

கூட்டிணைவு: 2002 டிசம்பர்  20ந்தேதி, தற்போதுள்ள திட்டங்கள் (திட்டங்கள் பட்டிலை அறிந்து கொள்ள
கீழே கிளிக் செய்யவும்)
பதிவு செய்யப்பட்ட அலுவலகம் : இந்திய வேளாண்மை காப்பீட்டு நிறுவனம் 
முகவரி 1 : 

13வது மாடி, “ அம்மா தீப்
14, கஸ்தூர்பா காந்தி  மார்க்
கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி: (011) 46869800
தொலைநகலி:(011)46869815
முகவரி 2 : 

21வது மாடி, “அம்மா தீப்
14, கஸ்துர்பா காந்திமார்க் கன்னாட் ப்ளேஸ்
நியூ டெல்லி - 110 001, இந்தியா
தொலைபேசி : (011) 46869860
தொலைநகலி : (011) 46869854, 46869855
இ-மெயில் : aicho@aicofindia.org

பரிசோதனை அடிப்படையிலான வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ரபி பருவச் சாகுபடி – 2009 - 10

2009 ஆண்டு காரிப் பருவத்தில் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம், தற்போதைய 2009-10 ஆண்டின் ராபி பருவத்திலும் செயலாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைத் திட்டம், கீழ்கண்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ளது:
ஆந்திரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்ரா, மேகலாயா, ஒரிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்காளம்.

இந்த பரிசோதனைத் திட்டத்தின் குறிக்கோள்கள்
அதிகப்படியான அல்லது குறைவான மழை போன்ற இயற்கை பாதிப்புக்களால், பயிர்ச் சாகுபடியில் ஏற்படும் பொருளாதார இழப்புக்களிலிருந்து உழவர்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பரிசோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
  • ரபி பருவத்தில், பருவம் தாண்டி பெய்யும் பருவ மழை, வெப்பம், பனி, ஈரப்பதம் போன்ற முக்கியமான காரணிகள்  பயிர்களை அதிகம் பாதிக்கின்றன.
  • ரபி பருவத்தில் பயிரிடப்படும் பெரும்பாலான உணவு தானியங்கள், சிறு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணைவித்துகள் மற்றும் வணிக மற்றும் தோட்டப்பயிர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
  • வங்கிகளில் பயிர்க் கடன் வாங்கிய மற்றும் வாங்காத அனைத்து உழவர்களும் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள். எனினும், வங்கிக்கடன் வாங்கியோர் கட்டாயமாகவும், வாங்காதவர்கள் அவரவர் சுயமாகவும் சேர்ந்து கொள்ளலாம்.
  • இத்திட்டம், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் (AIC),  தனியார் காப்பீட்டு நிறுவனங்களான ஐசிஐசிஐ லொம்பார்டு, IFFCO-TOKIO மற்றும் சோழமண்டலம் MS போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
  • இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறைக் காப்பீட்டு நிறுவனங்களும், கடன் பெற்ற மற்றும் பெறாத விவசாயிகள் அனைவரையும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படும்
  • இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள பகுதிகள் பற்றி அறிவிக்கப்படும்
  • இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ள பகுதிகளைச் சார்ந்த கடன் பெற்ற விவசாயிகளுக்கு தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (NAIS)  செயல்படுத்தப்படமாட்டாது.  எனினும், அதே பகுதிகளிலுள்ள கடன் பெறாத விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான ஏதாவதொரு காப்பீட்டு நிறுவனத்திடம், தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் அல்லது வானிலைச் சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகிய இரண்டில் ஏதாவதொரு திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
  • இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்குரிய பகுதிகளை, அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப ஒதுக்கீடு செய்யவேண்டும். இத்திட்டத்தை   சோழமண்டலம் MS பொதுக் காப்பீட்டு நிறுவனம், தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டும் செயல்படுத்த பரிசீலிக்கலாம். 
  • இந்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படியும், தேசிய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDA) ஒப்புதல் பெற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுடைய வெவ்வேறு காப்பீட்டு திட்டங்களின் பிரிமியத் தொகை, காப்பீட்டுத் தொகை, காப்பீட்டு வழிமுறைகள், மானியங்கள் போன்ற விவரங்களை நடைமுறைப்  படுத்த வேண்டும்
  • கடன்பெறாத விவசாயிகள், காப்பீட்டுத் திட்டத்தின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வரம்புக்குள் (பொதுவாக பயிர்சாகுபடிக்கு ஆகும் செலவுக்கு சமமாக இருக்கும் மதிப்பு) தங்கள் தேவைக்கேற்ப குறைந்த தொகைக்கும் காப்பீடு செய்துகொள்ளலாம். ஆனால் அச்சிறிய தொகை அதிகபட்ச காப்பீட்டுத்தொகையில் பாதிக்கு கீழ் இருக்கக்கூடாது.
  • அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும், பிரிமிய தொகையை, வழக்கமான வழிமுறைகளை கொண்டு கணக்கிடவேண்டும்.  உணவு மற்றும் எண்ணைவித்துப் பயிர்களுக்கு அது எட்டு சதவீதத்திற்க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆனால், உணவு மற்றும் எண்ணைவித்துப் பயிர்கள் பயிரிடும் விவசாயிகள், தேசிய விவசாயக் காப்பீட்டு திட்டத்தின் (NAIS) கீழ் நிர்ணயம் செய்துள்ள  பிரிமியத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும்.  அவ்வாறு கணக்கிடும் போது பிரிமிய தொகையில் உள்ள வித்தியாசத்தை, மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் தலா 50 சதவீதம் என்ற விகிதத்தில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும்.
  • வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு,  விவசாயிகள் செலுத்தும் பிரிமிய தொகையில், அதிகபட்சமாக ஆறு சதவீதம், கீழ்கண்டவாறு வழங்கப்படுகிறது.
வ. எண்.
பிரிமியம்
மத்திய மற்றும் மாநில அரசு மான்யம் 50 : 50 மற்றும் உழவர்களால் செலுத்தப்படும் பிரிமியம்
1
இரண்டு  சதவீதம் வரை
மானியம் இல்லை
2
இரண்டு  சதவீதம் முதல் ஐந்து சதவீதம் வரை
குறைந்தபட்சம் 2 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 25 சதவீதம் மானியம்.
3
ஐந்து சதவீதம் முதல் எட்டு சதவீதம் வரை
குறைந்தபட்சம் 3.75 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 40 சதவீதம் மானியம்.
4
எட்டு சதவீதத்திற்கும் மேல்
குறைந்தபட்சம் 4.8 மற்றும் அதிகபட்சம் 6 சதவீத நிகர பிரிமியம் உழவர்களால் செலுத்தப்பட்டால், 50 சதவீதம் மானியம்.
  • வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு,  அதிகபட்சமாக 12 சதவீதம் வரை அசல் பிரிமியம் இருக்கலாம்.
  • இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய (IRDA) வழிமுறைகளின்படி,  தனியார் துறைக் காப்பீட்டு நிறுவனங்கள் பிரிமியத்திற்க்கான தங்கள் பங்கு மானியத்தொகையை அவ்வப்போது இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திடமிருந்து (AIC)  பெற்றுக்கொள்ளலாம். இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனம் இந்தத் தொகையை மத்திய மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து  பெற்றுக்கொள்ளும்.
  • வழங்கப்படகூடிய அனைத்து இழப்பீட்டு தொகைகளுக்கும் அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்.
  • இந்திய விவசாய காப்பீடு நிறுவனத்திற்கு (AIC) வழங்கப்படும் அதேயளவு மானியத் தொகையே தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த மானியத்தொகை, இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் (AIC) மூலமாக மட்டுமே வழங்கப்படும்.



வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் (WBCIS)


வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் என்றால் என்ன ?
மழைவீழ்ச்சி, வெப்பநிலை, குளிர், ஈரப்பதம் போன்ற காலநிலை காரணிகளால் ஏற்படும் பாதகமான சூழ்நிலைகளால், விவசாயிக்கு பயிர் இழப்பு ஏற்படும் பொழுது, காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் பெருநஷ்டத்தை மட்டுபடுத்துவதே, வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டத்தின் நோக்கமாகும்.



பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?
பயிர் காப்பீட்டு திட்டமானது, மகசூலில் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும். வானிலை அடிப்படையான காப்பீட்டு திட்டமானது, காலநிலை காரணிகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும்.  மகசூல்  மற்றும் கால நிலை காரணிகளை தொடர்புபடுத்தி, கால நிலை காரணி மாறுநிலை குறிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாறுநிலை குறிகளுக்கு மேல், காரணிகளின் அளவு செல்லுமேயானால்,  பயிர்கள் பாதிக்க தொடங்குகிறது. ஆகவே இக்காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கு, கருதப்படும் இழப்பினை அளிப்பதற்கு, இழப்பீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இன்னொரு வகையில் கூறவேண்டுமென்றால், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம் மகசூலிற்கு பதிலாக, காலநிலை காரணிகளை கொண்டு பயிரிட்டவருக்கான இழப்பீட்டு தொகையை அளிக்கிறது.



வானிலை காப்பீட்டு திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் எவை?
ஆந்திரபிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியபிரதேசம், மஹராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வானிலை காப்பீட்டு திட்டம், கரீப் 2003லிருந்து முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது.





தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டத்திலிருந்து எவ்விதத்தில் இது மாறுபடுகிறது?
வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டமானது, விவசாயிகளுக்கு, பாதகமான காலநிலை காரணிகளால் ஏற்படும் சேதத்தை ஈடுகட்டும் விதத்தில் தனிசிறப்பு வாய்ந்தது. இத்திட்டம் கரீபில் ஏற்படும் பாதகமான மழை வீழ்ச்சிக்கும் (குறைவான மற்றும் அதிகமான) மற்றும் ரபியில் ஏற்படும் பாதகமான காலநிலை காரணிகளான குளிர், வெப்பம், ஈரப்பதம் மற்றும் பருவமற்ற மழைக்கும், காப்பீடு அளிக்கிறது. இது மகசூல் உத்திரவாத காப்பீடு திட்டமல்ல.
இரு திட்டங்களின் ஒப்புமை:

வரிசை
எண்
தேசிய வேளாண்மை பயிர்
காப்பீட்டு திட்டம்
வானிலை அடிப்படையிலான
பயிர் காப்பீட்டு திட்டம்
1.
எல்லாவிதமான இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு (வறட்சி, வெள்ளம், பனிவீழ்ச்சி, பூச்சிதாக்குதல்) ஈடு செய்யும்
காலநிலை காரணிகளான மழைவீழ்ச்சி, குளிர், வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு. பயிர் சேதத்தால் இவைகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
2.
பழைய 10வருட மூல குறிப்புகள் இருந்தால் எளிதாக வடிவமைக்கலாம் .
காலநிலை குறியீடுகள் மற்றும் காலநிலை குறியீடுகளை மகசூல் நஷ்டத்திற்கு தொடர்பு படுத்துதலில் உண்டான தொழில்நுட்ப சவால்கள்
3.
உயர் அடிப்படை இடர்பாடு வரவு (குறிப்பிட்ட இடத்திற்கான (வட்டம்) தெக்சில்) மகசூல் மற்றும் விவசாயின் மகசூலில் உள்ள வித்தியாசம்
காலநிலை சம்பந்தப்பட்ட இடர் வரவு மழைக்கு அதிகமாகவும் மற்ற குளிர், வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றிற்கு மிதமாகவும் இருக்கும்
4.
குறிக்கோள் மற்றும் தெளிவு தன்மையை, ஒப்பிடும்போது குறைவு
குறிக்கோள் மற்றும் தெளிவுதன்மையை ஒப்பிடும்போது அதிகம்
5.
தரத்தில் ஏற்படும் நஷ்டம் கருத்தில் கொள்ளபடமாட்டாது
காலநிலை குறியீடுகள் மூலம் இந்த நஷ்டம் கருத்தில் கொள்ளப்படுகிறது.
6.
நஷ்ட மதீப்பீடு தொகை அதிகம்
நஷ்ட மதிப்பீடு தொகை இல்லை
7.
கோரிக்கை தீர்வில் காலதாமதம் ஆகும்
வேகமான கோரிக்கை தீர்வு
8.
கோரிக்கையின் மாண்யத்திற்கு உதவி புரிவதால், அரசாங்க நிதி உத்திரவாதம் திறந்த நிலையில் உள்ளது.
 தவணை கட்டணத்திற்கு உதவி செய்வதால், முன்பாகவே அரசாங்க பொருளாதார உத்திரவாதம் கணிக்கப்படுகிறது.



இந்த காப்பீட்டு திட்டம் இயங்கும் முறை என்ன?
இந்த திட்டமானது, பரப்பு முறை (Area Approach) எனும் கோட்பாட்டினை கொண்டுள்ளது. எல்லாவற்றிலும் ஒத்துப்போவதாக கருதப்படும் ஒரு பரப்பினை, மேற்கோள் பரப்பாக Reference unit area)  கருதி, இழப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த பரப்பானது, அரசாங்கத்தால் பயிர் காலத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டு, ஒவ்வொருபயிர் காப்பீட்டாளருக்கும் இப்பரப்பிற்கு ஒத்துப்போகும் வகையில் கோரிக்கைகள் மதிப்பிடப்படும். ஒவ்வொரு மேற்கோள் பரப்பும், மேற்கோள் வானிலை மையத்துடன் (Reference Weather Station) இணைக்கப்பட்டு, அந்த நிலையத்தின் காலநிலை குறிப்புகளை பெற்று, கோரிக்கைகளுடன் உட்படுத்தப்படும். நடப்பு பருவத்தில் ஏதேனும் பாதகமான காலநிலை ஏற்பட்டு இருந்தால், இத்திட்டத்தின் நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுக்கு உட்பட்டு, இழப்பீட்டு அமைப்பிற்கு ஏற்றவாறு, காப்பீட்டு தொகை அளிக்கப்படும். பரப்புமுறை அணுகுமுறை தனிப்பட்ட அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது. தனிப்பட்ட அணுகுமுறையில் இழப்பீடானது தனிப்பட்ட காப்பீட்டு விவசாயிகளின், நஷ்டத்தை மதிப்பீடு செய்யும். மேற்கோள் வானிலை நிலையம் அமைக்கப்பட்ட இடத்தில் நிலவும் வானிலையானது, அதனுடன் இணைக்கப்பட்ட பண்ணைகளில் நிலவும் வானிலைப்போலவே இருக்கும். ஒரே நாளில் வானிலையானது (குறிப்பாக மழைவீழ்ச்சி) சிறிய அளவிலேயே வேறுபட வாய்ப்பு உண்டு. ஆனால் பதினைந்து நாட்களுக்கோ, மாதத்திற்கோ அல்லது ஒரு பருவத்திற்கோ கணக்கிடப்படும்போது இந்த வேற்றுமை மறைந்துவிடும். எனவே ஒரு வட்டத்தில் உள்ள மேற்கோள் வானிலை மையத்தின் வானிலை, மேற்கோள் பரப்பிலுள்ள அனைத்து பண்ணைகளின் வானிலையை குறிப்பதாக அமையும்.



இந்த திட்டத்தை வாங்குவதற்கு தகுதியானவர்கள் யார்?
அனைத்து விவசாயிகளும் (வார சாகுபடியாளர் மற்றும் குத்தகை சாகுபடியாளர் உட்பட) இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் நிறுவனங்களிடமிருந்து, பயிருக்கான கடனை பெற்றவர்களுக்கு இத்திட்டம் அவசியமாகும். மற்றவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப.



காப்பீட்டு பாதுகாப்பு தொகை (உறுதிதொகை) கணக்கிடுமுறை
காப்பீட்டாளர் பயிரை விளைவிக்க தேவையான உட்பொருட்களுக்கு ஆகும் செலவே, உறுதி தொகை ஆகும். மாநில அரசாங்கத்தின் வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னர், AIC ஆனது, பருவகாலம் தொடங்குவதற்கு முன்பே, பயிரை விளைவிப்பதற்கான உறுதி தொகையை  அறிவித்து விடும். இது பயிர்கள் மற்றும் RUA  பொறுத்து மாறுபடும். மேலும் உறுதி தொகையானது, காலநிலையின் காரணிகளின் முக்கியதுவத்தை பொறுத்து, பிரித்து வழங்கப்படும்.



காப்பீட்டுத் தொகை
எதிர்பார்க்கப்பட்ட நஷ்டத்தை பொறுத்து, காப்பீட்டுத் தொகை அமைகிறது. எதிர்பார்க்கப்பட்ட நஷ்டமானது, 25லிருந்து  100வருடங்களுக்கு உட்பட்ட காலநிலை காரணிகளை, கொண்டு பெறப்படுகிறது. காப்பீட்டு தொகையானது, பயிர் மற்றும் RUA-வை பொறுத்து மாறுபடும். விவசாயிகளுக்கு, காப்பீட்டு தொகையில், உச்சவரம்பிட்டு அதற்குமேல் செல்லும் காப்பீட்டு தொகையை, மத்திய அரசும் மாநில அரசும் 50:50 விகிதத்தில் பிரிமீயம் தொகையினை பகிர்ந்து கொள்ளவும் ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாயிகளால் செலுத்தப்படும், பயிர் வகைகளுக்கான பிரிமீயம் தொகை.
உணவு பயிர்வகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள்

வ.எண்
  பயிர்கள்
காப்பீட்டு விவசாயிகள் கட்டவேண்டிய பிரிமீயம் தொகை
1.
கோதுமை
 1.5% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.
2.
மற்ற பயிர்கள் (மற்ற தானியங்கள், சிறு தானியங்கள் பயிறு வகைகள் எண்ணெய்பயிர்கள்)
 2.0% அல்லது தொகைக்கான வட்டி, இவை இரண்டில் குறைவானது.
ஒராண்டு    வணிக தோட்டக்கலை பயிர்கள்

வ.எண்
பிரிமீயம்
மானியம் பிரிமீயம்
 1.
 2% வரை
 மானியம் இல்லை
 2.
>2 - 5%
 25%,  2% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
 3.
       >5 - 8%
 40% , 3.75% நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
 4.
    >8%
 50%, 4.8% , 6%,  நிகர் பிரிமீயம் விவசாயிகளால் கட்டப்படுவதற்கு உட்பட்டது.
நிகர பிரிமீயமானது, காப்பீட்டாளர் கடன் வாங்கி இருப்பின், கடன் கொடுத்த நிறுவனத்தால் கட்டப்பட வேண்டியதாகும்.








கால்நடை காப்பீட்டுத் திட்டம்

மத்திய அரசால் அளிக்கப்பட்ட, கால்நடை காப்பீட்டு திட்டமானது பத்தாவது ஐந்து ஆண்டு திட்டத்தில் 2005 -2006 மற்றும் 2006-07 லும், 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2007-08 லும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் மாதிரி அடிப்படையில் நிறுவப்பட்டது. இந்த திட்டமானது தற்போது 300 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த காப்பீட்டு திட்டமானது  இரட்டை நோக்கத்துடன்  ஆரம்பிக்கப்பட்டது. ஒன்று, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு, திடீரென்று ஏற்படும் கால்நடை இழப்பிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகும்.  மற்றொன்று, கால்நடை காப்பீட்டின் முக்கியவத்துவத்தை மக்களுக்கு உணர வைத்து, திட்டத்தை பிரபலப்படுத்தி, கால்நடை மற்றும் அதை சார்ந்த பொருளின் தரத்தை உயர்த்துவதாகும்.
இந்த திட்டத்தின்கீழ், உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள், அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாகப் பெறும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீட்டிற்கான பிரிமிய கட்டணத்தில் 50% வரை மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தொகை முழுவதையும் மத்திய அரசே ஏற்கிறது. இந்த மானியச் சலுகை, ஒரு பயனாளிக்கு இரண்டு கால்நடைகள் வீதம், அதிகபட்சமாக  3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும்  (கோவாவை தவிர்த்து) அந்தந்த மாநில கால்நடை மேம்பாட்டு கழகத்தின் மூலம் அமுல்படுத்தப்படுகிறது.  

இத்திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் மற்றும் பயனாளிகளை தேர்தெடுக்கும் விதம்.
  • உள்நாட்டு மற்றும் கலப்பின வகை கறவை பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் இந்த திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும். உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் மற்றும் எருமைகள் என்பது, ஏற்கனவே ஒரு கன்று ஈன்ற, தற்போது பால் கறந்துகொண்டிருக்கும், கறவை வற்றிய மற்றும் கர்ப்ப காலத்திலுள்ள அனைத்து கால்நடைகளையும் குறிக்கும்.  இப்படிப்பட்ட கால்நடைகளுக்கு, அதிகபட்ச சந்தை விலைக்கு காப்பீடு  அளிக்கப்படுகிறது.
  • வேறு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் கால்நடைகள் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு அளிக்க இயலாது.
  • மானியமானது ஒரு பயனாளிக்கு  இரண்டு விலங்குகளுக்கு மூன்று வருடத்திற்கு அளிக்கப்படும்.
  • வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்பட்சத்தில், குறைவான செலவில் அதிக காப்பீட்டு பலன் பெற, விவசாயிகள், மூன்று ஆண்டுகளுக்கான திட்டத்தில் சேருவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். எனினும், விவசாயிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு காப்பீடு செய்துகொள்ள விரும்பினால், அதையும் செய்து தர வேண்டும். அவ்வாறு செய்யும் போது, அதே கால்நடைக்கு மீண்டும் காப்பீடு செய்யும்போது திட்ட நடைமுறையில் உள்ளபடி, உரிய காப்பீட்டு மானியம்  தரப்பட வேண்டும்.

கால்நடைகளின் சந்தை விலையை நிர்ணயித்தல்
சந்தையின் அதிக பட்ச விலைக்கு, காப்பீடு அளிக்கப்படும். இதனை பயனாளி, அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீட்டு முகவர் ஆகிய மூவரும் சேர்ந்து நிர்ணயம் செய்வர்.

காப்பீடு அளிக்கப்பட்ட கால்நடையை அடையாளம் காணுதல்
காப்பீட்டை கோரும் போது, கால்நடையை சரியாக அடையாளம் காண வேண்டும்.  இதனால் காது டேக் இடுவது, சரியாக இருக்க வேண்டும்.  வழக்கமான முறையில் காதில் டேக் இடுதல் அல்லது மைக்ரோசிப் இடுதல் ஆகியவற்றில் ஒன்றை காப்பீடு திட்டத்தை எடுக்கும் போது செய்ய வேண்டும்.   இதற்கான செலவை காப்பீட்டு  கழகங்கள்  ஏற்றுக்கொள்ள வேண்டும்.   இவற்றை பராமரிப்பது பயனாளியின கடமையாகும்.  இதன் தரம் மற்றும் விதம் காப்பீட்டு கழகம் மற்றும் பயனாளி இருவராலும் ஒத்துக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்
காப்பீட்டு காலத்தில் கால்நடைகளை விற்றாலோ அல்லது வேறு ஒருவரிடம் கொடுத்தாலோ பயனாளியின் அங்கீகாரம் புதிய சொந்தகாரருக்கு மாற்றப்பட வேண்டும். எனவே, காப்பீட்டு கழகத்தில் காப்பீட்டுக்கு நுழையும்போதே இதற்கான விதிமுறைகளை தீர்வு செய்து கொள்ள வேண்டும்.

காப்பீட்டு காலத்தில் சொந்தக்காரர் மாறுதல்
இழப்பீடு தரும் சூழல் நேர்ந்தால், காப்பீடு செய்யப்பட்ட தொகையை, தேவையான ஆவணங்கள் அளித்த 15 நாட்களுக்குள் கட்டாயம் அளிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனத்துடனான முதல் தகவல் அறிக்கை, காப்பீட்டு பாலிசி ஆவணம், இழப்பீடு கோரும் படிவம் மற்றும் இறந்த கால்நடையின் பிரேதப் பரிசோதன அறிக்கை ஆகிய நான்கு ஆவணங்களின் அடிப்படையிலேயே, காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கலாம். கால்நடைகளை காப்பீடு செய்யும் போதே காப்பீட்டு கழகம், காப்பீட்டை கோருவதற்கான சரியான வழிமுறைகளையும், என்னென்ன சான்றுகள் வேண்டும் என்றும், இவைகளை பயனாளிகளுக்கு பாலிசி எடுக்கும் போதே வழங்கவும், செய்ய வேண்டும்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment